Tamil National Update : இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்வேறு விண்கலங்களை வின்னி்ல் செலுத்தி வருகிறது. உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள இஸ்ரோவின் தலைவராக தற்போது சிவன் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே அவரின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்ட, சமீபத்தில் அவரின் பதவிக்காலம் மீண்டும் நீடிக்கப்பட்டது.
தற்போது அவரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி 14-ந் தேதியுடன் அவரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசு, தற்போது புதிய தலைவராக சோம்நாத் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சோம்நாத், அங்கிருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். அதன்பிறகு இந்தின் இனஸ்டிடியூட் சயின்ஸ் முதுகலையில் வின்வெளி படிப்பை முடித்தள்ளார்.
இந்தியாவில் மிக முக்கியமான படைப்பான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பத்தில் முக்கிய பங்காற்றிய சோம்நாத் தற்போது விக்ரம் சாராபாய் வின்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். மேலும் சந்திராயன் 2 மிஷனில் தரையிறங்கும் இயந்திரங்களை உருவாக்கியது மற்றும் ஜிசாட் 9 மிஷனில், முதன் முறையாக மின்சார உந்துவிசை அமைப்பை பறக்கவிட்டது போன்ற சாதனைகளை படைத்துள்ள சோம்நாத்க்கு தற்போது வாழ்த்தக்கள் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “