scorecardresearch

சென்சோடைன் விளம்பரங்களுக்கு இந்தியாவில் தடை… விதிமீறியதாக குற்றச்சாட்டு

சென்சோடைன் மட்டுமின்றி, போலியான விளம்பரங்களை வெளியிட்டதற்காக Naptol நிறுவனத்ததுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்சோடைன் விளம்பரங்களுக்கு இந்தியாவில் தடை… விதிமீறியதாக குற்றச்சாட்டு

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(CCPA),GlaxoSmithKline (GSK) Consumer ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் சென்சோடைன் தயாரிப்பு விளம்பரங்களை இந்தியாவில் நிறுத்திட உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விளம்பரம் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, போலி விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காக நாப்டோல் ஆன்லைன் ஷாப்பிங் லிமிடெட் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிசிபிஏ தானாக முன்வந்து விசாரணை நடத்தி, GlaxoSmithKline (GSK) நிறுவனத்திற்கு எதிராக ஜனவரி 27 அன்றும், Naaptolக்கு எதிராக பிப்ரவரி 2 அன்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த உத்தரவின்படி, இந்தியாவில் அனைத்து சென்சோடைன் விளம்பரங்கள் பகிரப்படுவதையும் ஏழு நாள்களுக்குள் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சென்சோடனை விளம்பரத்தில் இடம்பெற்ற உலகம் முழுவதுமுள்ள பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பேஸ்ட் என குறிப்பிட்டதை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள பல் மருத்துவர்கள், எந்தவொரு தயாரிப்பு அல்லது மருந்துக்கும் பகிரங்கமாக ஒப்புதல் அளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.

இந்த விதிமுறையை சுட்டிகாட்டிய ஆணையம், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தைத் மாற்றவோ, பல் உணர்திறன் குறித்த நுகர்வோர் அச்சத்தைப் போக்கிட வெளிநாட்டு பல் மருத்துவர்களைக் காட்டவும் அனுமதிக்க முடியாது. எனவே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் பிரிவு 2 (28) இன் படி இந்தியாவிற்கு வெளியே பயிற்சியளிக்கும் பல் மருத்துவர்களின் ஒப்புதல்களை காட்டிய விளம்பரம் தவறான என பட்டியலிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட “உலகின் நம்பர்.1 சென்சோடைன் பெஸ்ட்” மற்றும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிவாரணம், 60 வினாடிகளில் வேலை செய்கிறது போன்ற கூற்றுகள் குறித்து ஆய்வு செய்து 15 நாள்களுக்குள் ரிப்போர்ட் சமர்ப்பிக்க இயக்குநர் ஜெனரலுக்கு சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ” சிசிபிஏ-இன் உத்தரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் பின்பற்றிய விளம்பர யூக்தி, சட்டங்கள் மற்றும் தொழில்துறை வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் பொறுப்பாகவும், வாடிக்கையாளர்களின் நலனுக்காக உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

மற்றொரு வழக்கில், Naaptol Online Shopping Ltd நிறுவனத்திற்கு எதிராக சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “Set of 2 Gold Jewelry”, “Magnetic Knee Support” and “Acupressure Yoga Slippers” போன்ற தவறான விளம்பரங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் 24X7 சேனலை நடத்துவதால் , தவறான விளம்பரங்கள் நுகர்வோர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். டிவியில் ஒளிப்பரப்படும் விளம்பரங்கள் ரெக்கார்ட் செய்யப்பட்டவை என்றும், நேரடி ஒளிப்பரப்பு கிடையாது என்பதை நெப்டால் குறிப்பிட அறிவிறுத்தியுள்ளது.

இதுதவிர, தயாரிப்புகளின் செயற்கை பற்றாக்குறை குறித்த விளம்பரங்களை பதிவிட தடை விதித்துள்ளது. உதாரணமாக,இந்த தயாரிப்பை இன்று ஒரே நாள் மட்டுமே வாங்கி முடியும், 5 மணிக்குள் மட்டுமே வாங்கிட முடியும் போன்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Sensodyne asked to discontinue advertisements in india

Best of Express