ஹத்ராஸ்: அசாதாரணமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது – உச்ச நீதிமன்றம்

உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சம்பவத்திற்கு வெவ்வேறு கதைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், உச்ச நீதிமன்றம் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் கூறினார்.

supreme court hathras case, supreme court hathras rape case, hathras case, ஹத்ராஸ், ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் கொலை, உத்தரப் பிரதேசம், hathras news, hathras case news, hathras rape case news, hathras rape case today news, hathras case news, hathras gangrape case, உச்ச நீதிமன்றம், விசாரணை, hathras gangrape case latest news, ஹத்ராஸ் அப்டேட்ஸ், hathras gangrape case news update, rahul gandhi, priyanka gandhi, hathras gangrape, hathras rape protests, rahul gandhi hathras

ஹத்ராஸில் ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாகக் கூறப்படுவது அசாதாரனமாகவும் அதிர்ச்சியளிப்பதாவும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சாட்சிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் உத்தரப் பிரதேச அரசிடம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ அல்லது உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று கோரிய மனுவை விசாரித்த இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “இந்த நிகழ்வு மிகவும் அசாதாரணமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது. ஹத்ராஸ் வழக்கு சாட்சிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது குறித்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ஒரு வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களா என்பதை சொலிசிட்டர் ஜெனரல் கண்டறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார்.

உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சம்பவத்திற்கு வெவ்வேறு விவரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதனால் உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

“அங்கே பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால், ஒரு தலித் இளம் பெண் தனது உயிரை இழந்துவிட்டால் என்பது சோகமான உண்மை. இதை விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்று மேத்தா கூறினார்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்த வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை உ.பி.யில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் கோரினார். மேலும் அவர், “இந்த வழக்கில் அரசு தரப்பில் எந்த வழக்கறிஞரும் தேவையில்லை என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார். இதற்கு சொலிட்டர் ஜெனரல் மேத்தா, “சாட்சிகள் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கு சாட்சிகளைப் பாதுகாக்க சட்டம் தேவையில்லை. அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.” என்று கூறினார்.

சமூக ஆர்வலர் சத்யமா துபே மற்றும் வழக்கறிஞர்கள் விஷால் தாக்ரே மற்றும் ருத்ரா பிரதாப் யாதவ் ஆகியோர் அளித்த மனுவில் இந்த வழக்கு விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் உ.பி. அரசாங்கமும் மாநில அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினர்.

செப்டம்பர் 14 ம் தேதி 4 ஆதிக்க சாதி ஆண்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தலித் பெண் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தேசிய அளவில் பொதுமக்களின் கோப்பத்தையும் எதிர்க்கட்சியின் போராட்டத்தையும் தூண்டியது. போலீஸாரின் அழுத்தத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இல்லாமல் அவசரமாக உடல் தகனம் செய்ததாக வெளியான செய்திகள் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு நிலைமையை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பச் செய்துள்ளன.

முன்னதாக, உத்தரபிரதேச அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க கோரியது. ஒரு சார்பான நோக்கத்துடன் சொந்த நலனுக்காக பொய்யான மற்றும் தவறான கதைகளை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்யும் என்று கூறியிருந்தது.

கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை என்று குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கு, சாதி மோதலை பரப்புவதற்கும், வன்முறைமுறையைத் தூண்டவும் அரசியல் நலன்கள் சார்ந்து ஊடகங்களின் பிரிவுகளால் பிரசாரம் செய்து சதி செய்யப்படுகிறது என்று எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டிய அரசு பிஐ ஐ விசாரணை கோரியுள்ளது.

“தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட போதிலும், சில பொய்யான கதைகள் சிலரின் சொந்த நலன்களுக்காக பல்வேறு தவறன கதைகள் பரவுவதுஅதிகரிக்கத் தொடங்கின” என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி மாநிலத்தில் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதற்கு வேண்டுமென்றே திட்டமிட்ட முயற்சியை மேற்கொள்வதில் சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் சில பிரிவுகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் பிரிவுகள் ஈடுபட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

“சமூக, மின்னணு அச்சு ஊடகங்களின் சில பிரிவுகளும், அரசியல் கட்சிகளின் சில பிரிவுகளும் வேண்டுமென்றே இந்த செயலில் தலையிட முயல்கின்றன. மேலும், உண்மையை வெளிப்படுத்தவும், தண்டிக்கப்படவும் குற்றவாளிகளை அனுமதிக்கவில்லை” என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உ.பி அரசாங்கம் “அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் தொடர்ச்சியான சட்டவிரோத சம்பவங்கள் இரவில் பாதிக்கப்பட்டவரை தகனம் செய்வதற்கான அசாதாரண நடவடிக்கையை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை கட்டாயப்படுத்தியது. மேலும், வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது” என்று கூறியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமைக்கு மத்தியில் “உ.பி சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜி பிரசாந்த் குமார், 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். பிரமாணப் பத்திரத்தில் அம்மா மற்றும் மகளின் வீடியோ பதிவு இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அந்த பெண் கழுத்து தவிர வேறு எங்கும் காயம் அடையவில்லை என்றும் சந்தீப் மட்டுமே குற்றம் சாட்டப் பட்டுள்ளதாகவும் வேறு எதுவும் நடக்கவில்லை தெளிவாக கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய எட்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 22ம் தேதி ஏ.எம்.யு மருத்துவமனையில் சுயநினைவு அடைந்த அந்த பெண், பாலியல் வன்கொடுமை தொடர்பான விவரங்களை அளித்திருந்தார். அவரது அறிக்கை ஒரு மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்ட பின்னர், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளை எஃப்.ஐ.ஆரில் போலீசார் சேர்த்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sepreme court hathras case uttar pradesh government response witness protection cbi probe

Next Story
ஜி.எஸ்.டி விவகாரம் : இழப்பீட்டு திட்டங்களை ஏற்க மறுக்கும் எதிர்கட்சி மாநிலங்கள்!GST deadlock Opposition states reject compensation plan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com