கோவோவாக்ஸ் தடுப்பூசி : ஜூலையில் குழந்தைகளுக்கு செலுத்தி சோதனை

covid-19 vaccine: அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடந்த கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவில் இது கொரோனா தொற்றைத் தடுப்பதில் 90.4% திறன் வாய்ந்தது என தெரியவந்துள்ளது.

covavax

சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா அடுத்த மாதம் நோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக பூனேவை சேர்ந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மறுசீரமைப்பு நானோ துகள்கள் புரத அடிப்படையிலான தடுப்பூசி NVX-CoV2373. இந்தியாவில் கோவாவாக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது. நோவாவாக்ஸுடன் இணைந்து சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதத்திற்குள் கோவோவாக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடந்த கோவோவாக்ஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவில் இது கொரோனா தொற்றைத் தடுப்பதில் 90.4% திறன் வாய்ந்தது என தெரியவந்துள்ளது. நோவோவாக்ஸ் அதன் சோதனைத் முடிவுகளை அறிவித்த சில நாட்களுக்கு பிறகு, குழந்தைகள் மீது செலுத்தி சோதனை செய்வதை தாமதமின்றி தொடங்குமாறு சீரம் நிறுவனத்திடம் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறினார்.

மேலும் கூறுகையில், “நோவோவாக்ஸ் தடுப்பூசியின் முடிவுகள் முக்கியமானது மற்றும் சுவரஸ்யமானது. பாசிட்டிவ்வான வளர்ச்சி உள்ளது, அவை மிகவும் நம்பிக்கைக்குரியவை. கிடைத்திருக்கக்கூடிய முடிவுகளின் தரவுகள் படி இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான பணிகள் ஏற்கனவே சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது. உரிய நேரத்தில் அந்நிறுவனம் குழந்தைகள் மீது பரிசோதனையை தொடங்கும் என நம்புகிறேன். தற்போது பாதுகாப்பு தரவுகள் இருப்பதால் தாமதமின்றி தொடங்க வேண்டும் என்றார்.

குழந்தைகள் மீது சோதனை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினால், நாட்டின் மக்கள் தொகையில் குழந்தைகள் மீது பரிசோதனை நடத்தும் மூன்றாவது தடுப்பூசி கோவோவாக்ஸ் ஆகும்.

பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் கோவாக்சின் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்திறன், பாதுகாப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக 2-3 கட்டங்களாக சோதனை நடத்தியது. Zydus Cadila’s ZyCov-D Covid-19 தடுப்பூசி நிறுவனம் 12 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்களிடம் பரிசோதனை நடத்தியது.

கோவோவாக்ஸ் சோதனை இரண்டு காரணங்களால் முக்கியமானது.

இந்தியாவின் நோய் தடுப்பு திட்டத்திற்காக ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் சுமார் 20 கோடி தடுப்பூசி கிடைக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. இந்த கோவோவாக்ஸ் தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்தால் போதும்.

நோவோவாக்ஸ் தடுப்பூசி, கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்திலிருந்து பெறப்பட்ட ஆன்டிஜெனை உருவாக்க முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட மறுசீரமைப்பு நானோ துகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. Human papillomavirus (HPV), hepatitis மற்றும் influenza ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளை உருவாக்க இதே போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அமெரிக்காவின் ஃபைசரின் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த முடிவு தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது என டாக்டர் பால் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பிரச்சனையல்ல. இந்தியாவில் 12முதல் 18 வயதுகுட்பட்டவர்கள் 13-14 கோடி பேர். இவர்களுக்கு செலுத்த 25-26 கோடி டோஸ் தடுப்பூசி தேவை. அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என டாக்டர் பால் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serum could begin covovax trial on children in india next month

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com