வெளியீட்டுக்குத் தயாராகி நிறுத்தி வைப்பு: 2 முன்னாள் ராணுவத் தளபதிகள் எழுதிய புத்தகங்களின் கதை

இந்த 2 புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சக ஒப்புதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சக ஒப்புதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2 tales

ஒரு முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளியீட்டுக்கு காத்திருக்கிறது, மற்றொரு  முன்னாள் ராணுவத் தளபதி எழுதிய புத்தகம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த 2 புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சக ஒப்புதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

 தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வியாழன் அன்று செய்தி வெளியிட்ட போது, 'அலோன் இன் தி ரிங்' புத்தகத்தின் எழுத்தாளர் என்.சி.விஜ் 2002 முதல் 2005 வரை ராணுவத் தளபதியாக இருந்தார். பாகிஸ்தானின் ராணுவக் கொள்முதல்களைக் கண்டறிவதில் இந்திய புலனாய்வு அமைப்புகள் "கடுமையாக தோல்வியடைந்தன" என்று எழுதியுள்ளார். கார்கில் போர் நடந்து இந்த மாதம் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அடுத்த வாரம் ப்ளூம்ஸ்பரி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், கார்கில் போரின் போது ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக (DGMO) இருந்த ஜெனரல் விஜ், R&AW - இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் - "தவறான மதிப்பீட்டை" வழங்கியதாக எழுதியுள்ளார். பாகிஸ்தானுடன் போர் மூளும் வாய்ப்பு இருந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து அதில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் ஜூலை 20-ம் தேதி வெளியிடப்பட இருந்தது.

ப்ளூம்ஸ்பரியின் தலைமை ஆசிரியர் கிரிஷன் சோப்ரா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது,  ​​“சில நாட்களுக்கு முன்பு, ராணுவத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் புத்தக சோதனைக்கு 
கொடுக்கச் சொன்னார்கள். ஆகஸ்ட் 2 அன்று புத்தக வெளியீட்டு விழாவிற்கு விருந்தினர்களை அழைத்தோம், ஆனால் அது இப்போது ஒத்திவைக்கப்படும் என்றார். 

Advertisment
Advertisements

குர்கானில் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜெனரல் விஜ் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் எழுதிய புத்தகப் பிரதியை சமர்ப்பிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்னை அழைத்தார். நான் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றேன், இவ்வளவு காலமாக ரகசியங்களை எவ்வாறு வைத்திருப்பது? நிகழ்வுகள் மிக நீண்ட காலத்திற்கு முந்தையவை என்பதால் எனது கையெழுத்துப் பிரதியை வெளியிடுவதற்கு முன்பு ராணுவத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது என் மனதில் தோன்றவில்லை" என்றார். 

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விகளுக்கு ராணுவத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை.

சோப்ரா கூறுகையில்: "ஜெனரல் விஜின் எழுதிய புத்தகம் சிறந்த ஒன்று. சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவரால் எழுதப்பட்ட ஆக்கபூர்வமான ஆய்வுகளைக் கொண்டுள்ளது, அதை விரைவில் வெளியிடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார். 

ஆங்கிலத்தில் படிக்க:   Set for launch, now on hold: Tale of two books by former Army Chiefs

2019 முதல் 2022 வரை ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் எம்.எம் நரவனே எழுதிய 'Four Stars of Destiny' என்ற புத்தகத்தில், சீனாவுடனான ராணுவத்தின் 2020 எல்லை மோதல்கள் பற்றிய இதுவரை அறியப்படாத விவரங்கள் மற்றும் அக்னிவீர் பற்றிய விமர்சனம் உள்ளது. இந்த புத்தகம், ஆறு மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்காக காத்திருக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அதன் வெளியீட்டாளர்களான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இடம் பேசுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் வெளியீட்டை ஸ்லாட் செய்யாது மற்றும் அமேசானில், அதற்கான வெளியீடு "தற்போது கிடைக்கவில்லை" என்ற அறிவிப்பு உள்ளது. மேலும் இது அமைச்சகத்தின் ஒப்புதலில் உள்ளது என்றனர்.

புனேயில் உள்ள ஜெனரல் நரவனேவை  தி இந்தியன் எக்ஸ்பிரஸ்சார்பில் தொடர்பு கொண்டபோது, ​​ தனது சுயசரிதையின் "விமர்சனத்தின்" தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார். "நான் இந்த புத்தகத்தை எழுதி மகிழ்ந்தேன், அதுதான் முக்கியம். அதை எழுதியதில் திருப்தி கிடைத்துள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: