Advertisment

காங்கிரஸ் குழுவை சந்திக்க மம்தா கட்சி மறுப்பு: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் குறைந்துவிட்டதாக தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Setback for INDIA seat sharing hopes in Bengal Trinamool not meet Congress panel for talks Tamil News

தங்களது தொகுதிப் பங்கீடு திட்டத்தை ஏற்கனவே காங்கிரஸிடம் தெளிவாக தெரிவித்துவிட்டதாகவும் டி.எம்.சி தெரிவித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

West Bengal | Mamata Banerjee: மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் 'இந்தியா கூட்டணி' என ஓரணியில் திரண்டுள்ளன. இந்நிலையில், இந்த கட்சிகளுக்கு இடையே தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நேற்று வியாழக்கிழமை மேலும் குறைந்துவிட்டதாக தெரிகிறது. கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழுவை சந்திக்கப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் சிக்னல் கொடுத்துள்ளது. அத்துடன் தங்களது தொகுதிப் பங்கீடு திட்டத்தை ஏற்கனவே  காங்கிரஸிடம் தெரிவித்துவிட்டதாகவும் டி.எம்.சி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் மற்றும் மோகன் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் குழு, சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி), சிவசேனா (யு.பி.டி), தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் ஆர்.ஜே.டி போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல் சுற்று விவாதத்தை நடத்தியுள்ளனர். டி.எம்.சி, காங்கிரஸுக்கு மால்டா தக்சின் மற்றும் பஹரம்பூரை வழங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அந்த இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வைத்துள்ளது. 

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் டி.எம்.சி மற்றும் பா.ஜ.கவுக்கு எதிராக போராடி அந்த இரண்டு இடங்களை கட்சி சொந்தமாக வென்றது. மேலும் காங்கிரஸுக்கு மம்தாவின் "அருள் அல்லது தாராள மனப்பான்மை" தேவையில்லை என்று கூறினார்.

"நான் அதை நிரூபித்ததால் மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிராக தனியாக போராட முடியும். நானும் எனது கட்சியும் இரண்டு இடங்களிலும் தனித்து போட்டியிட முடியும். இரண்டு இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள மம்தா பானர்ஜியிடமிருந்து எங்களுக்கு எந்தக் கருணையும் தேவையில்லை, ”என்று சவுத்ரி இந்த வார தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். 

டி.எம்.சி கட்சி காங்கிரஸ் குழுவைச் சந்திக்கத் தயாராக இல்லை என்பதையும், அதன் சலுகையைப் பற்றி விவாதிக்க அக்கட்சியானது பழைய பெரிய கட்சிக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் இது உணர்த்துகிறது.

"நாங்கள் அவர்களுக்கு இரண்டு இடங்களை வழங்கியுள்ளோம். வங்காளத்தில் உள்ள 42 இடங்களில் இரண்டில் மட்டுமே காங்கிரஸ் 30% வாக்குகளைப் பெற்றது. அவர்கள் எப்படி அதிக இடங்களைப் பெற முடியும்? காங்கிரஸ் மேலிடம் நேரடியாக மம்தா பானர்ஜியிடம் பேசினால், அவர் மேலும் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பார். எனவே காங்கிரஸ் கூட்டணிக் குழுவை சந்திப்பதில் எந்த பயனும் இல்லை. எங்கள் சலுகை மிகவும் தெளிவாக உள்ளது,” என்று மூத்த டி.எம்.சி தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ராய்கஞ்ச், மால்டா உத்தர், ஜாங்கிபூர் மற்றும் முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு காங்கிரஸ் உரிமை கோருகிறது. ஆனால், பேச்சுவார்த்தை மேசைக்கு திரிணாமுல் காங்கிரஸ் வர மறுப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. காங்கிரஸ் கூட்டணிக் குழு கூட்டத்திற்காக டி.எம்.சி கட்சியை தொடர்பு கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் டி.எம்.சி எந்த பிரதிநிதியையும் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப விரும்பவில்லை என்று தெரிகிறது. 

மேலும், மேற்கு வங்கத்தில் டி.எம்.சி-யுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று இடதுசாரிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். 

தேசிய கூட்டணிக் குழு இன்று வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) தலைவர்களுடன் தனது இரண்டாவது சந்திப்பை நடத்த உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சந்திக்கும் வாய்ப்புள்ளது. காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான முதல் சந்திப்பில், பஞ்சாப் மற்றும் டெல்லியைத் தவிர குஜராத், கோவா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதன் இடங்களுக்கான கோரிக்கையை மேசையில் வைத்தது. அத்திஷி, சந்தீப் பதக் மற்றும் சௌரப் பரத்வாஜ் அடங்கிய ஆம் ஆத்மிக் குழுவிடம் குழு உறுப்பினர்கள், டெல்லிக்கான ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிப்பதில் மட்டுமே அதன் ஆணை உள்ளது என்று கூறினர்.

டெல்லியில் உள்ள 7 இடங்களில் நான்கில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. பஞ்சாபில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தாலும், காங்கிரஸின் மாநில பிரிவு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை அமைக்க கடுமையாக எதிர்த்து வருகிறது. சுவாரசியமாக, டி.எம்.சி-யும் மேற்கு வங்கத்திற்கு வெளியே தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளது. மேகாலயாவில் ஒரு தொகுதியிலும், அசாமில் குறைந்தது இரண்டு இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி விரும்புகிறது.

இதற்கிடையில், பீகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை சிக்கலாக்கும் வகையில், சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும், மூத்த ஆர்.ஜே.டி தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம் தனது கருத்தை தெரிவித்துள்ளதாகக் கூறியது. சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் கட்சியின் வாதம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மற்ற எல்லாக் கட்சிகளையும் விட சிறந்த வாக்கு வித்தியாசத்தை கொண்டிருந்தது. ஆர்.ஜே.டி தலைமையிலான மெகா கூட்டணியின் ஒரு பகுதியாக போட்டியிட்ட அக்கட்சி 19 இடங்களில் 12 இடங்களில் வெற்றி பெற்றது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பித்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Setback for INDIA seat-sharing hopes in Bengal, Trinamool won’t meet Congress panel for talks

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment