Advertisment

இந்திய துணை தூதரகத்தில் உளவு பார்த்ததா சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி?

90 மில்லியனுக்கும் அதிகமான சிபிசி உறுப்பினர்களை ‘உளவு’ என்று நினைப்பது நகைப்புக்குரியது மற்றும் விரும்பத்தகாதது

author-image
WebDesk
New Update
இந்திய துணை தூதரகத்தில் உளவு பார்த்ததா சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி?

P Vaidyanathan Iyer

Advertisment

Seven branches of China’s ruling party have India link  :  இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளார்களால் கூட்டமைப்பு தரவுகளின் படி சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏழு கிளைகளுக்கு இந்தியாவுடன் தொடர்பு உள்ளது. அதில் ஒரு சி.பி.சி. உறுப்பினர், ஷாங்காயில் உள்ள இந்திய துணை தூதரகத்தில், சீன அரசின் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மூலம் வேளைக்கு அமர்த்தப்பட்டார் என்று தெரிய வந்துள்ளது.

முதன்முறையாக உலகளாவிய ஊடகங்களால் அணுகப்பட்ட தரவுகளில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மற்றும் உறுப்பினர் அமைப்பு பற்றிய விவரங்கள் தெளிவாகியுள்ளது. சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளாக செயல்பட்டு வருகிறது, கட்சி குழுக்கள் பெரும்பாலான பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தரவுகளை அளித்த நம்பத்தகுந்த வட்டாரம் தன் தகவல் குறித்து தெரியாமல் இருப்பதை விரும்புகிறது. இந்த தரவுகளில் மொத்தம் 79,000 சி.பி.சி. கிளைகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 1.95 மில்லியன் நபர்கள் அக்கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர். இது மொத்த சி.பி.சி. உறுப்பினர்களில் 92 மில்லியனில் 2.1% ஆகும். இந்த தரவு ஏ.என்.சி, எச்.எஸ்.பி.சி, பிஃபைசர், அஸ்ட்ரஜென்கா, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிலும், வங்கி, பாதுகாப்புத்துறை, மருத்துவ துறை மற்றும் நிதித்துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதில் 91 உறுப்பினர்கள் அடங்கிய 7 குழுக்கள் இந்தியாவுடன் தொடர்பில் உள்ளனர். தனித்தனியாக, சீன அரசுக்கு சொந்தமான வெளிநாட்டு முகமை சேவைத் துறை சேவைகளைப் பயன்படுத்தி 30 வெளிநாட்டு தூதரகங்களால் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உள்ளூர் சீன நிபுணர்களின் பட்டியலில், ஷாங்காயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய அந்த நபரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அந்த தனிநபரின் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, இனம் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிடவில்லை. இந்த உள்ளூர் சீனர்கள் ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2014ம் ஆண்டில் இருந்து 2017 வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

முன்னதாக, செப்டம்பரில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு ஷென்செனை மையமாக கொண்டு இயங்கி வந்த தனியார் நிறுவனமான ஜென்ஹுவா டேட்டா இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள அனைத்து முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளை எவ்வாறு கண்காணித்து வருகிறது என்பது குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டது. மத்திய அரசுதேசிய சைபர் பாதுகாப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைப்பாளர் குழுவை அமைத்தது. அந்த குழு இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் சமர்பித்தது. அது தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

சிபிசி கிளைகள் மற்றும் உறுப்பினர் பற்றிய தகவல்கள், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள தனியார் சாட்ரூம்களில் முதன்முதலில் பகிரப்பட்டன, இது சீனாவின் இடை-நாடாளுமன்ற கூட்டணி (ஐபிஏசி) மற்றும் உலகளாவிய ஊடக அமைப்புகளின் கூட்டமைப்புக்கு சமீபத்தில் கிடைத்தது. ஐபிஏசி என்பது உலகளாவிய நாடு-கடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாகும். இது ஜனநாயக நாடுகள் சீனாவை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கான்பெர்ராவை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான இன்டர்நெட் 2.0, இதற்கு முன்னர் ஜென்ஹுவா தரவு மூலத்தை சரிபார்த்தது, இந்தத் தரவையும் அந்நிறுவனமே மதிப்பீடு செய்துள்ளது.

கடந்த மாதத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தரவுத்தளத்தின் மூலம் ஏழு சி.சி.பி கிளைக் குழுக்களை இந்தியாவுடன் இணைத்தது.

இந்த கிளைக் குழுக்களின் இந்தியா இணைப்பையும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு மனித வளங்களை வழங்குவதில் FASD இன் சேவைகளையும் புரிந்து கொள்ள விரும்பும் சில கேள்விகளுக்கு இந்தியாவில் உள்ள சீன தூதரகம் பதிலளிக்கவில்லை. ஒரு அறிக்கையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 90 மில்லியனுக்கும் அதிகமானவர்கள். அனைவரும் இதயப்பூர்வமாக மக்களுக்கு சேவை செய்யும் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு பயப்படுவதற்கு ஏதாவது இருக்கிறதா? 90 மில்லியனுக்கும் அதிகமான சிபிசி உறுப்பினர்களை ‘உளவு’ என்று நினைப்பது நகைப்புக்குரியது மற்றும் விரும்பத்தகாதது” என்று குறிப்பிட்டிருந்தது.

ஷாங்காயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகியோருக்கு திங்களன்று அனுப்பப்பட்ட விரிவான கேள்விகளுக்கும் இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.

இந்தியாவுடன் தொடர்புடைய ஏழு கிளைகள்: ஷாங்காய் எலெக்ட்ரிக் பவர் ப்ளாண்ட் என்ஜினிரியங் கார்ப்பரேசன் இந்தியா ப்ரோஜெக்ட் ப்ராஞ்ச் கமிட்டியில் 31 உறுப்பினர்கள், இந்தியா ரிசர்ச் இன்ஸ்டியூட் ஜாய்ண்ட் பிராஞ்ச் (17 உறுப்பினர்கள்), இந்தியா ரிசர்ச் இன்ஸ்டியூட் மேனேஜ்மெண்ட் ப்ராஞ்ச் (13 உறுப்பினர்கள்), சிட்டி இந்தியா டென்த் ஃபேக்ட்ரி ப்ராஞ்ச் (11 உறுப்பினர்கள்), சிபிசி ஷாங்காய் அர்பன் கன்ஸ்ட்ரக்சன் இண்டெர்நேசனல் என்ஜினிரியங் கோ, இந்தியா ரீஜினல் செண்டர் பிராஞ்ச் கமிட்டி (10 உறுப்பினர்கள்), சிசிபி ஷாங்காய் சில்லிங் இந்தியா பிராஞ்ச் (7 உறுப்பினர்கள்) மற்றும் புது தில்லி சேல்ஸ் டிபார்ட்மெண்ட் பார்ட்டி பிராஞ்ச் (3 உறுப்பினர்கள்).

சீனாவின் அறிஞரும், சிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் ஆளுமைத் துறையின் இணை பேராசிரியருமான ஜபின் ஜேக்கப்பை இது சார்ந்து தொடர்பு கொண்டபோது, “சீனாவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு கட்சி குழு இருக்கும். சீனாவில் கட்சி-அரசு செயல்படுவது இப்படித்தான்” என்றார். மேலும் அனைத்து சி.பி.சி. உறுப்பினர்களும் உளவாளிகள் என்று கூறுவது சரியானதல்ல. ஆனால் சில கட்சி உறுப்பினர்களுக்கு சில கூடுதல் பொறுப்புகள் உள்ளன. களத்தில் கட்சியின் கண்களாகவும் காதுகளாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். கட்சியின் உறுப்பினராக தேர்வாவது அவ்வளவு எளிதானதல்ல. பள்ளி கல்லூரியில் எழுதிய கட்டுரைகள், உங்களின் பெற்றோர் பொறுப்பு அனைத்தும் அதில் சேரும். ஆனால் கட்சிக்குள்ளேயே நிலை உயர்வது என்பது நீங்கள் அந்தஸ்தில் வளர்வது, கூடுதல் பொறுப்புகளை ஒப்படைப்பது என்பதாகும் என்றும் அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment