பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் ராம்புரா புல் மைதானத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் பலர் காயமடைந்தனர்.
இந்த மோதல் குறித்து பேசிய ராம்புரா ஃபுல் காவல் நிலைய பொறுப்பாளர் பிக்ரம்ஜீத் சிங், இரு தரப்பிலிருந்தும் புகார்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
சிரோமணி அகாலி தளம் கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் நிகழ்ச்சிக்கு வந்ததாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது. அதே போல், SAD கட்சி உள்ளூர் தலைவர்கள், காங்கிரஸ்காரர்கள் தான் முதலில் தாக்கியதாக தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரான காங்கிரஸ் நிர்வாகி குஷ்பாஸ் சிங் மெஹ்ராஜ் கூறுகையில், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் அதிகப்பட்சம் 15 பேர் வரலாம் என தொலைகாட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எஸ்ஏடி கட்சியினர் சுமார் 300க்கும் அதிகமாக வருகை தந்தனர். விவாத நிகழ்ச்சியின்போது, அகாலி ஆதரவாளர்கள் திடீரென தாக்க தொடங்கினர். மெஹ்ராஜ் நகரின் முன்னாள் கவுன்சில் தலைவர் ஹரிந்தர் ஹிந்தா, அவரது சகோதரர் மனிந்தர் மிண்டா ஆகியோர் என்னை கம்பிகள் மற்றும் செங்கற்களால் தாக்கினர். எனக்கு நெற்றியில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த எஸ்ஏடி வேட்பாளரின் மகன் குர்பிரீத் சிங் மாலுகா, விவாத நிகழ்ச்சி முடிவடைந்து, அனைவரும் புறப்பட்டோர். அப்போகு, காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென தாக்க தொடங்கினர். எங்கள் வாகனங்களில் ஒன்றையும் சேதப்படுத்தினர். பலர் காயமடைந்தனர் என்றார்.
மெஹ்ராஜின் புகாரின் பேரில், எஸ்ஏடி தலைவர்கள் ஹரிந்தர் சிங் ஹிண்டா, அவரது சகோதரர் மனிந்தர் சிங் மிண்டி மற்றும் நிர்மல் சிங் மெஹ்ராஜ் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் ராம்புரா புல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil