கிழக்கு மத்தியப் பிரதேசம், கொங்கன் மற்றும் கோவா, கடலோர கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிராவின் விதர்பா, கேரளா மற்றும் புதுச்சேரியின் மாஹே உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 27 அன்று வடக்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகளிலும், குஜராத் மற்றும் ராஜஸ்தானின் மீதமுள்ள பகுதிகளிலும் மேலும் பரவியது.
கனமழை
மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம், பீகார், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன் மற்றும் கோவா, சத்தீஸ்கர், கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
இதேபோல் சௌராஷ்டிரா, கட்ச், விதர்பா, அஸ்ஸாம், மேகாலயா, மத்தியப் பிரதேசம், ஒடிசாவில் சில இடங்கள், மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், கடலோர கர்நாடகா, மராத்வாடா, கடலோர ஆந்திரா மற்றும் யானம் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது.
வானிலை அறிவிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, “மேற்கு உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்கள் மழை பொழிவு காணப்படும்.
இமாச்சல பிரதேசம் ஜூன் 28 மற்றும் ஜூன் 29; மற்றும் கிழக்கு உத்தரபிரதேசம் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை. கிழக்கு ராஜஸ்தானில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளிலும், உத்தரகண்ட் ஜூன் 28 முதல் ஜூன் 30 வரையிலும் மழை பொழிய வாய்ப்புகள் உள்ளன.
கர்நாடகம், கேரளா
ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை கடலோர கர்நாடகாவிலும், ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை கேரளாவிலும் லேசான/மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மழை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“