பல்வேறு மாநிலங்களில் கொரோனா முதல் அலையின் போது உருவாக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பை, தொற்று நோய் பேரீடர் முடிவுக்கு வருகிறது என்ற நம்பிக்கையால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மூடியது ஒரு தவறான முடிவாகும் . தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டன. ஒப்பந்த சுகாதாரப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ தர ஆக்ஸிஜன் போன்ற முக்கியமான சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனுடைய விளைவு கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக தாக்க ஆரம்பிக்கும்போது மாநிலங்கள் அதை எதிர்கொள்ள தயாராக இல்லை. கடந்த வருடம் கொரோனா ஆரம்பிக்கும்போது இருந்த நிலையை போல் மோசமாக உள்ளது. கடந்த பிப்ரவரி 21 அன்று பாஜகவின் அரசியல் தீர்மானத்தில் கோவிட் காலத்தில் உலகத்திற்கே முன்மாதிரியாக இந்தியா செயல்பட்டதாக கூறி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது, உண்மைதான் என்றாலும் மத்திய அரசு கொரோனா பரவல் அதிகம் இருந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தொடர அறிவுறுத்தவில்லை. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கியது.
படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றிய அச்சம் தேவையானதாகியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், கரோனா படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். பொன்னான நேரத்தை வீணாக்காமல் மறு சுழற்சியில் கரோனா படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து உயிர்களை காக்க வேண்டும்.
டெல்லி
தலைநகர் டெல்லியில் கொரோனா முதல் அலையின்போது தினசரி பாதிப்பு 8,500 என்ற அளவில் பதிவானது. மற்ற மாநிலங்களைவிட டெல்லியில் அதிகம்.
இப்போது நிலவும் சூழலை போல நோயாளிகள் மருத்துவமனை படுக்கைகளுக்காக அலைந்தனர். இதனால் ஜூன், ஜூலை மாதங்களில் 4 தற்காலிகமாக மருத்துவ கூடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் மிகப்பெரியது சர்த்தார்பூரில் ஐடிபிபி நடத்தி வரும் தற்காலிக மருத்துவ கூடம் தான். 10 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளை தங்க வைக்க முடியும். அதேபோல ஆயிரம் படுக்கைகளில் ஆக்சிஐன் வசதி இருந்தது. தவுலா குவான் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இதைவிட சற்று சிறிய வசதிகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்துமே இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200 என்ற அளவில் குறைந்ததால் மூடப்பட்டது.
தற்போது டெல்லியில் நாளொன்றுக்கு 25,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 28,000 என்ற அளவில் கூட செல்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்ததால் தற்பொது இந்த தற்காலிக மருத்துவமனைகள் மீண்டும் திறப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த மூன்று நாட்களாக 300 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகின்றன.
கர்நாடகா
மாநிலத்தில் புதிதாக 25000 பேருக்குக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மூன்றில் இரண்டு பங்கு பெங்களூருவில் பதிவாகியுள்ளது.இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டி சென்றுள்ளது. கர்நாடகா முதல் அலையின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. நாட்டில் இரண்டாவது மாநிலமாக அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளுக்கு இடையிலான இடைப்பட்ட மாதங்களில், பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களுடன் 18 ஐசியு படுக்கைகளை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்கான மையப்படுத்தப்பட்ட மருத்துவமனை படுக்கை ஒதுக்கீடு முறையின்படி, கோவிட் -19 நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 117 ஐ.சி.யூ வென்டிலேட்டர் படுக்கைகள் உள்ளன .மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 47, மற்றும் 13 பிற அரசு மருத்துவமனைகளில் 70 உள்ளன. மத்திய அரசு உதவியுடன், இந்த எண்ணிக்கை 300 ஆக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் படுக்கைகள் அதிகரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இதன் விளைவு: அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களைக் கொண்ட அனைத்து 117 ஐ.சி.யுக்களும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 217 படுக்கைகளும் கடந்த ஒரு வாரமாக முழுமையாக நிரம்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம்
மகாராஷ்ட்ராவிற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட மாநிலமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை 38000 புதிய பாதிப்புகள் பதிவானது. இது கொரோனா முதல் அலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். அந்த நேரத்தில், 500 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சுமார் 1.5 லட்சம் படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளதாக அரசு கூறியது.
மூன்று அடுக்கு அமைப்பில், எல் -3 என நியமிக்கப்பட்ட 25 மருத்துவமனைகளில், வென்டிலேட்டர்கள், ஐ.சி.யூக்கள் மற்றும் டயாலிசிஸ் ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் பொருத்தப்பட வேண்டும். முதல் அடுக்கு, எல் -1 ஐ உருவாக்கிய 400 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் குறைந்தது 48 மணிநேர ஆக்ஸிஜன் சப்ளை இருக்க வேண்டும். குறைந்தது 75 மருத்துவமனைகள் எல் -2 என நியமிக்கப்பட்ட, பல படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி மற்றும் வென்டிலேட்டர்களைக் கொண்டிருந்தன.இருப்பினும், இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, கோவிட் 19 பாதிப்பு குறைந்து வந்ததால் இந்த 83 மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்தையும் மாநில அரசு குறைத்தது. -15 எல் -3 மற்றும் 68 எல் -2. இந்த மருத்துவமனைகளில் 17,235 படுக்கைகள் இருந்தன, அவற்றில் 7,023 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியும், 1,342 க்கு வென்டிலேட்டர்கள் இருந்தன.
மார்ச் 31 ஆம் தேதி, பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியதும், 45 மருத்துவமனைகளுக்கு கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் அறிவிக்கப்பட்டது. இது 25000 படுக்கைகள் கொண்டதாக இருந்தது. இதனால் கொரோனா பாதிப்பை சமாளிக்க முடியும் என அரசு நம்பியது.
ஜார்க்கண்ட்
இதே போன்ற கதை ஜார்க்கண்டிலும் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவமனையை கோவிட் சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக அரசு அறிவித்தது. ராஞ்சி, தன்பாத், பொகாரோ, ஜாம்ஷெட்பூர் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள 12 தனியார் மருத்துவமனைகளும் இதே போன்ற வசதிகளாக மாற்றப்பட்டன. மாநில அரசுகள் மருத்துவமனை கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. ஆனால் இந்த கூடுதல் வசதிகள் பல உயிர்களை காப்பாற்றியது. ஆனால் இந்த ஆண்டு எந்த தனியார் மருத்துவமனையிலும் அந்த வசதி இல்லை. இதனால் படுக்கைகள் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
நெருக்கடியை சமாளிக்க சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது .ஆனால் தற்போது நோயாளிகள் இறப்பதற்கு வழிவகுக்கிறது என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஜார்க்கண்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனம், கோவிட் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பை மதிப்பிடுவதற்கான நிலையான உபகரணமான சி.டி ஸ்கேன் இயந்திரம் கூட இல்லை. ஒரு இயந்திரத்தை வாங்குவதற்கான செயல்முறையைத் தொடங்க மாநில உயர்நீதிமன்றத்தின் தலையீடு தேவை.
பீகார்
மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. பீகாரில் 5000 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த கோவிட் அவசர காலத்திலும் அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
கொரோனா முதல் அலையின்போதே ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளில் 10 வெண்டிலேட்டர் வசதிகளாவது இருக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இருப்பினும், 10 மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே ஐந்துக்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் உள்ளன. பீகாரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இல்லை. அண்டை மாநிலமான ஜார்க்கண்டிலிருந்துதான் பெறப்படுகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”