Advertisment

ஆபாச வீடியோ சர்ச்சை, பாலியல் புகார்: ஜே.டி (எஸ்) கட்சியில் இருந்து பிரஜ்வல் சஸ்பெண்ட்

எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான ஆபாச வீடியோ சர்ச்சை, பாலியல் புகாரைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 sex scandal MP Prajwal Revanna expelled from JD S Tamil News

பாலியல் புகார், ஆபாச வீடியோ சர்ச்சை... பிரஜ்வல் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இருந்து இடைநீக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Prajwal Revanna | Karnataka | JD (S): கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை ஜே.டி (எஸ்) சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் சகோதரரின் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக வீடியோவுடன் கூடிய பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹாசன் நகர் முழுவதும் பரவி வரும் அந்த வீடியோவில், பல பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் சில காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

 சிறப்பு புலனாய்வு குழு

இதுபற்றி முதல்வர் சித்தராமையாவுக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தது. இந்நிலையில், சித்தராமையா தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில், பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ரேவண்ணா ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்று விட்டார் என தகவல் வெளியானது. பா.ஜ.க.வுடன், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியில் உள்ளது. இந்த சூழலில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இந்த விவகாரத்தில் ஆளும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஹாசன் பகுதியிலுள்ள ஏதோவொரு தலைவர் மீது கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. இவற்றுக்கு கர்நாடக பா.ஜ.க. தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பலர் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

சஸ்பெண்ட்

இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா மீதான ஆபாச வழக்கைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முடியும் வரை பிரஜ்வால் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்ய கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Karnataka Prajwal Revanna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment