Advertisment

கொல்கத்தாவை உலுக்கிய பெண் மருத்துவர் படுகொலை: 'குற்றவாளி தூக்கிலிடப்படுவான்'- கொந்தளித்த மம்தா

முதுகலை மருத்துவ மாணவி படுகொலை கொல்கத்தாவில் பெரும் அதிர்வலையை எதிர்படுத்திய நிலையில், இது தொடர்பாக முழுமையான விசாரணை கோரி பல மருத்துவர்கள் மருத்துவமனை பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kolkata medical student sexual assault govt hospital west bengal cm Mamata Tamil News

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அதே மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவர் சஞ்சோய் ராய் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய முதுகலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

31 வயதான முதுகலை மருத்துவ மாணவி அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி வரை பணியில் இருந்த நிலையில், காலையில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு ஹாலில் இறந்து கிடந்துள்ளார். விசாரணை அறிக்கையின்படி, முதுகலை மருத்துவ மாணவியின் உடலில் பல காயங்கள் இருந்துள்ளன. அவர் உடல் இரத்தத்துடன் காணப்பட்டது. உடலின் ஒரு பகுதியில் மட்டுமே ஆடை இருந்துள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Doctor’s death at top Kolkata hospital: One arrested, rape charges added to case; ‘if needed, accused will be hanged,’ says Mamata

இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்வலையை எதிர்படுத்திய நிலையில், இது தொடர்பாக முழுமையான விசாரணை கோரி பல மருத்துவர்கள் மருத்துவமனைக்கு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். இன்று சனிக்கிழமை மற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே, மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அதே மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவர் சஞ்சோய் ராய் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சஞ்சோய் ராய் மீது  கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரிக்க கொல்கத்தா போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர்.

இறந்த முதுகலை மருத்துவ மாணவியின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், முந்தைய நாள் இரவு 11 மணியளவில் தனது மகளுடன் பேசியதாக கூறினார். மேலும், "அவர் மிகவும் சாதாரணமாகத் தான் பேசினார். இந்த சம்பவத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் அரை நிர்வாணமாக படுத்திருந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்,'' என்று மனமுடைந்து கூறினார். 

இந்த சம்பவம் குறித்து பதிலளித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வெறுக்கத்தக்கது. இது எனக்கு தனிப்பட்ட இழப்பாக உணர்கிறேன். அவர்களின் [மருத்துவர்களின்] கோபமும் கோரிக்கைகளும் நியாயமானவை, நான் அதை ஆதரிக்கிறேன்.

நான் நேற்று ஜார்கிராமில் இருந்தேன், ஆனால் அனைத்து முன்னேற்றங்களையும் நான் கண்காணித்துக்கொண்டிருந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். நான் மரண தண்டனைக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், தேவைப்பட்டால், அந்தக் குற்றவாளி தூக்கிலிடப்படுவார். அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்." என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

West Bengal Mamata Banerjee Kolkata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment