இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது புகார் அளித்த இரண்டு முக்கிய பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம், டெல்லி காவல்துறையினர் புகைப்படம், ஆடியோ, வீடியோ ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். இதன் மீது நடவடிக்கை எடுக்காததால், டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 7 மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் எம்.பி பிரிஜ் பூஷன் மீது புகார் அளித்த முக்கிய இரண்டு மல்யுத்த வீராங்கனைகள், பிரஜ் பூஷன் அவர்களின் மார்பகங்களை தவறாக தொட்டதற்கும், வயிற்றுப் பகுதியில் தீண்டியதை நிரூபிக்க புகைப்பட, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை டெல்லி காவல்துறை கேட்டுள்ளது.
காவல்துறை பதிவு செய்த எப்.ஐ.ஆர்-யின் படி, 2016 மற்றும் 2019-க்கு இடைபட்ட காலத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அலுவலகம் ( 21, அஷோகா சாலை, ), பிரிஜ் பூஷனின் எம்.பி வீடு, மற்றும் வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகளின்போது இந்த பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளது.
சி.ஆர்.பி.சி பிரிவு 91 கீழ், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஜூன் 5ம் தேதி இது தொடர்பாக டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த சான்றுகளை வழங்க ஒரு நாள் கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
” தங்களிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் காவல்துறையிடம் வழங்கியுள்ளோம். எங்களின் உறவினர் ஒருவரும் காவல்துறை கேட்ட எல்லா ஆதாரங்களையும் வழங்கினார்” என்று மல்யுத்த வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷனக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஒரு புகாரில், வெளிநாட்டில் நடைபெற்ற போட்டியில், வீராங்கனை ஒருவர் பதக்கம் பெற்ற பிறகு பிரிஜ் பூஷன் 10 முதல் 15 நொடிகள் இருக்கமாக தன்னை கட்டியணைத்ததாகவும். இதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள, தனது கையை மார்பகத்திற்கு அருகிலேயே வைத்திருந்ததாகவும் வீரங்கனை ஒருவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமர்பிக்க வேண்டும் என்று அந்த வீராங்கனையிடம் காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 7ம் தேதி, மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்தது. இந்நிலையில் இதே நாளில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களிடம் 6 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்நிலையில் இதைத்தொடர்ந்து மல்யுத்த வீரர்கள், போராட்டத்தை ஜூன் 15 வரை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.
புகார் அளித்தவர்களிடம், சம்பவம் நடந்த தேதி, நேரம் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அலுவகலத்தில் அவர்கள் இருக்கும் நேரம், வெளிநாடுகளுக்கு சென்றபோது அவர்களுடன் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டலின் விரங்களையும் வழங்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புகார் கொடுத்த வீராங்கனை ஒருவரிடமும், அவரது உறவினரிடம் அவர்களுக்கு வந்த மிரட்டல் தொலைப்பேசி அழைப்புகள் தொடர்பாக விவரங்கள் மற்றும் ஆதாரங்களை வழங்குமாறு காவல்துறை கேட்டுள்ளது. மேலும் சம்பந்தபட்ட உறவினரிடம், தொலைப்பேசி அழைப்புகளின் பதிவுகள், வாட்ஸ் ஆப் குறுச்செய்திகளின் விவரங்கள், வீடியோ, புகைப்படத்தை சம்பர்பிக்குமாறு தனியாக நோட்டீஸ் அனுப்பு உள்ளனர்.
கடந்த வெள்ளிகிழமை, நடந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் வீராங்கனையை விசாரிக்க டெல்லி காவல்துறை, அவரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றது. இந்நிலையில், அந்த நேரத்தில் பிரிஜ் பூஷன் அங்கிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“