scorecardresearch

Sexual Harassment Case: நீதிபதி பாப்டேவை சந்தித்த சந்திரசூட்: தான் எழுப்பிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கோரிக்கை!

Sexual Harassment Case: அந்த பெண் நீதிபதிகள், ருமா பால், சுஜாதா மனோகர், ரஞ்சனா தேசாய். 

sexual harassment case, ranjan gogoi, chandrachud

Sexual Harassment Case: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, பெண் உதவியாளர் ஒருவர் பாலியல் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க, நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டார், தலைமை நீதிபதி.

அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள நீதிபதி சந்திரசூட், இந்த வழக்கு தொடர்பாக அவர் எழுப்பிய விஷயங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளுமாறு கோரியுள்ளார்.

நீதிபதி சந்திரசூட்டின் கடிதத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் தான் முதலில் பிரசுரித்தது. ஆனால் தலைமை நீதிபதி வழக்கை சந்திக்கும் நீதிபதி பாப்டேவை, எந்த நீதிபதியும் சந்திக்கவில்லை என உச்சநீதி மன்றம் மறுத்திருக்கிறது.

தனது கடிதத்தைப் பற்றி விவாதிக்க நீதிபதி சந்திரசூட், நீதிபதி பாப்டேவை மே 2-ம் தேதி சந்தித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளி நபரையும் இந்த விசாரணைக் குழுவில் இணைக்க வேண்டும் என்பதை சந்திரசூட்டின் கடிதம் வலியுறுத்துகிறதாம். அதோடு ஓய்வு பெற்ற 3 உச்சநீதி மன்ற பெண் நீதிபதிகளின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

அந்த பெண் நீதிபதிகள், ருமா பால், சுஜாதா மனோகர், ரஞ்சனா தேசாய்.

நீதிபதி சந்திரசூட் எழுதிய கடிதத்தில், நீதிபதிகள் பாப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர், ஏப்ரல் 30-ம் தேதி விசாரணையில் இருந்து விலகியுள்ள பெண்ணின் புகார் இல்லாமலேயே, ’முன்னாள் பிரிவு’ விசாரணையை தொடரக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தக் கடிதம் சந்திரசூட்டின் தனிப்பட்ட கடிதம் இல்லை எனவும், அபெக்ஸ் கோர்ட்டில் இருக்கும் 17 நீதிபதிகளின் ஒட்டு மொத்த கருத்து தான் அந்தக் கடிதம் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Sexual harassment case ranjan gogoi supreme court bobde chandrachud

Best of Express