ஜி20 மாநாடுக்கு முன்… டெல்லி மெட்ரோ ரயில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதிய எஸ்.எஃப்.ஜே

டெல்லியில் உத்யோக் நகர், பஸ்சிம் விஹார், நங்லோய், சிவாஜி பார்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சுவர்களில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' உள்ளிட்ட பல வாசகங்கள் உடன் வர்ணம் பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டெல்லியில் உத்யோக் நகர், பஸ்சிம் விஹார், நங்லோய், சிவாஜி பார்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சுவர்களில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' உள்ளிட்ட பல வாசகங்கள் உடன் வர்ணம் பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SFJ Delhi metro, Delhi Metro station pro-Khalistan, சீக்கியர்களுக்கான நீதி, சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ், டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷம், ஜி20 மாநாடு, pro-Khalistan delhi metro, delhi metro stations, G20 Summit SFJ, G20 Summit delhi, delhi news`

டெல்லி மெட்ரோ ரயில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதிய எஸ்.எஃப்.ஜே; போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லியில் உத்யோக் நகர், பஸ்சிம் விஹார், நங்லோய், சிவாஜி பார்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சுவர்களில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' உள்ளிட்ட பல வாசகங்கள் உடன் வர்ணம் பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

தடை செய்யப்பட்ட அமைப்பான 'நீதிக்கான சீக்கியர்கள்' ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (SFJ) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்கள், ஜி20 உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்னதாக, தேசிய தலைநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களை காலிஸ்தான் சார்பு கோஷங்கள் எழுதியதை அடுத்து, டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

உத்யோக் நகர், பஸ்சிம் விஹார், நங்லோய், சிவாஜி பார்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சுவர்களில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' உள்ளிட்ட பல வாசகங்கள் வர்ணம் பூசி எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், எஸ்.எஃப்.ஜே அமைப்பு அதன் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் சுவர்களில் எழுதியதைப் பற்றி பேசுகிற ஒரு வீடியோவை வெளியிட்டது. “ஜி20 பிரகதி மைதானத்தின் சண்டை இன்று தொடங்கியது… (பிரதமர்) மோடியும் இந்தியாவும்தான் இலக்கு” என்று அவர் அந்த வீடியோவில் கூறினார். அவர்களின் உறுப்பினர்கள் நான்கு முதல் ஐந்து மெட்ரோ நிலையங்களுக்குச் சென்று வாசகங்கள் எழுதியதைப் பற்றி ஜி20 நாடுகளுக்கு ஒரு செய்தியை அனுப்பியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவைப் பற்றி தெரிந்துகொண்டு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் சோதனை செய்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்குலைத்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.எஃப்.ஜே பணத்திற்காக வேலையைச் செய்ய ஆட்களை ஈர்க்கிறது. விரைவில் கைது செய்வோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: