அடுத்த வருடம் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் நேற்றைய தினத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார்.
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் காடீல் மற்றும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோரை அமித்ஷா சந்தித்தார். கர்நடாகாவின் கடற்கறை பகுதியில், கடந்த ஜூலை 20 முதல் 28 வரை மூன்று கொலை நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுதந்திரம் கிடைத்து75வது ஆண்டு நிகழ்வை கொண்டாடுவதற்காக சன்கல் கீ சித்தி என்ற கலைவிழா கர்நடாகாவில் நடைபெறுகிறது. இதில் அமித்ஷா கலந்துகொள்கிறார். அமித்ஷா கர்நாடகா சென்றுள்ள அதேவேளையில் பாஜக அரசு பல விமர்சங்களை அம்மாநிலத்தில் சந்தித்து வருகிறது. பிஜெவைஎம் ஊழியரை சங்பரிவார் அமைப்பினர் கொன்றதாக கூறப்படுவதும், ஊழல் குற்றச்சாட்டுகளும் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாகி உள்ளது.
கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் காடீல் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவரை பாஜக தேர்வு செய்ய உள்ளது.
இந்நிலையில் எடியூரப்பாவுடன் அமித்ஷா 20 நிமிடங்கள் பேசியுள்ளார்.கர்நாடக அரசியலில் எடியூரப்பாவின் இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. எடியூரப்பாவின் பதவி விலகல் மற்றும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் கட்டாயத்தின் பெயரில் அறிவித்தார். மேலும் அவரது மகன் பி.வை.விஜேந்திராவிற்கு அவர் முயற்சித்தும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை பெற்று தர முடியவில்லை. பாஜகவை விட்டு எடியூரப்பா மேலும் விலகினால், கட்சியின் லிங்காயத் வாக்குக்குகள் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“