PTI
குட்கா நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் அக்ஷய் குமார், ஷாருக்கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவமதிப்பு மனுவுக்கு பதிலளிக்கும்போது மத்திய அரசு, அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Shah Rukh Khan, Akshay Kumar, Ajay Devgn issued notice in gutka ad case: Allahabad HC told
இதே பிரச்னையை உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதாகவும், எனவே இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த பெஞ்ச், விசாரணையை மே 9, 2024க்கு ஒத்திவைத்தது.
குட்கா நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் நடிகர்கள் மற்றுன் புகழ் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வாதிட்ட மனுதாரரின் பிரதிநிதித்துவத்தை முடிவு செய்யுமாறு நீதிபதி ராஜேஷ் சிங் சவுகான் அமர்வு முன்பு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக அக்டோபர் 22-ம் தேதி அரசிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, அவமதிப்பு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசின் கேபினட் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அக்ஷய் குமார், ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி பாண்டே வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அமிதாப் பச்சன் குட்கா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், தனது விளம்பரத்தை காட்டி வரும் குட்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“