Advertisment

பிளாக்பஸ்டர் ஜவான் : ஷாருக்கானை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட பா.ஜ.க, ஆம் ஆத்மி

சனாதன் தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், "ஊழல் காங் ஆட்சியை அம்பலப்படுத்தியதற்காக ஷாருக்கானுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Shah Rukh Khan

ஷாருக்கானின் ஜவான்

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

ஷாருக்கான் – அட்லி கூட்டணியில் வெளியான ஜவான் திரைப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ள நிலையில், இந்த படத்தின் மூலம் ஷாருக்கான் தனது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் நிரூபித்து உச்சத்தை எட்டியுள்ளார். மேலும் இந்த படத்தில் அரசியல் விமர்சகராகவும் ஷாருக்கான் மாறியுள்ளதை தொடர்ந்து இந்த படத்தை மத்திய பாஜக மற்றும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

முதலில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரையிலான ஊழல், கொள்கை முடக்கம் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை அம்பலப்படுத்தியதற்காக ஷாருக்கானுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போதைய அரசாங்கத்தின் "சோகமான அரசியல் காலத்தை" இப்படம் அனைத்து பார்வையாளர்களுக்கும் நினைவூட்டுகிறது, என்று கூறியுள்ளார்.

அப்பா-மகன் கதையான ஜவான், அரசாங்க அக்கறையின்மை, ஊழல், விவசாயிகள் தற்கொலை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் இறக்கும் குழந்தைகள், பழுதடைந்த ராணுவ ஆயுதங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள ஆபத்தான தொழிற்சாலைகள் போன்ற பிரச்சனைகளைத் பற்றி கூறுகிறது. இதன் காரணமாக மக்கள் வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ஷாருக்கான் படத்தில் வலியுறுத்துகிறார்.

இதை சுட்டிக்காட்டிய பாட்டியா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் காங்கிரஸை குறிவைத்து, கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் ஊழல்கள் ஏதுமின்றி ஒரு "சுத்தமான சாதனையை" பராமரித்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, காந்தி பரிவார், "வீரர்களுக்கான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை விட விவிஐபி ஹெலிகாப்டர்களுக்கு" முன்னுரிமை அளித்தது, என்று அவர் குற்றம் சாட்டிய அவர், தேசிய பாதுகாப்பு பிரச்சினையில், புல்வாமா தாக்குதலுக்கு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) "தீர்மானமாகவும் விரைவாகவும்" பதிலளித்து பாலகோட் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கூறியுள்ளார். மேலும் நன்றி, ஷாருக்கான். பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி-யின் தலைமையில், இந்த பிரச்சினைகள் இப்போது கடந்த காலத்தின் ஒரு விஷயமாகிவிட்டன, ”என்று பாட்டியா பதிவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி

செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நியாயமாக வாக்களியுங்கள் என்ற படத்தின் செய்தியைப் பற்றி பேசினார். "ஜவான் படத்தில், ஷாருக்கான் அடுத்த முறை ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் வாக்கு கேட்க வரும்போது, ​​'என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பீர்களா, எங்களுக்கு நல்ல சிகிச்சை அளிப்பீர்களா?' என்று அவரிடம் கேளுங்கள் என்று கூறினார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி மட்டுமே எங்களுக்கு வாக்களியுங்கள், ஏனென்றால் உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல கல்வியைக் கொடுப்போம் என்று அவர் கூறினார்.

அதோடு, சனாதன தர்மம் தொடர்பாக இந்திய கூட்டணி விவகாரம் பாஜகவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை இந்து எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல்என்று கூறிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார், பிரபலமான கொலையின் வழியில் இந்து மதத்தை கொலை செய்ததாக கூறிய அவர்,  இந்த கூட்டத்தில் "இந்து மதத்தை எப்படி அழிப்பது என்று அவர்கள் விவாதிப்பார்கள்" என்று பத்ரா குற்றம் சாட்டினார்.

இதனிடையே கட்சி தனது அதிகாரப்பூர்வ கணக்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்த கிராஃபிக் ஒன்றைப் பகிர்ந்துள்ளது; அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் (சனாதனம் தொடர்பான அவரது கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியது) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் சனாதன தர்மத்தை அழிப்பவர்கள்”. அதற்கு அடுத்ததாக, பிரதமர் நரேந்திர மோடி காவி உடையில் தியானம் செய்யும் படத்தை, “சனாதன தர்மத்தின் பாதுகாவலர்என்ற தலைப்பில் அக்கட்சியினர் வைத்தனர்.

டெல்லி தீ விபத்தில் இருந்து விலகி, ஆனால் மத்திய அரசின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றும் நடவடிக்கையாக, மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண முயற்சிகள் குறித்து உதயநிதி ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மணிப்பூரைச் சேர்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு பயிற்சிக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டன.

தற்போது ஒரு மாத பயிற்சி முடிந்துள்ள நிலையில், மணிப்பூர் வீரர்களுடன் இன்று கலந்துரையாடினோம். இந்த இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய தமிழகத்தின் அன்புக்கு வீரர்கள் நன்றி தெரிவித்தனர். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழகம் வந்து பயிற்சிக்கு திரும்பும் மணிப்பூர் வீரர்களின் லட்சியம் வெற்றி பெறட்டும்,'' என பதிவிட்டுள்ளார்.

அசாமில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது மனைவி ரினிகி புயன் சர்மாவுடன் தொடர்புடைய நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ரினிகியின் பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கடன் இணைக்கப்பட்ட மானியத்தின் ஒரு பகுதியாக 10 கோடி ரூபாய் பெற்றதாக மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் குற்றம் சாட்டியதை அடுத்து சர்மாவின் அறிக்கை வெளியானது.

இந்த அறிக்கையில் அவர், "எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசாங்கத்திடம் இருந்து எந்த நிதி மானியமும் பெறவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்காக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது பிரதிநிதிகளான தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரிடம் தெரிவித்த கருத்துகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்பும், பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்பும் படமாக்கப்பட்ட இந்த வீடியோ, மற்ற இரு தலைவர்களிடம் ஷிண்டே கூறியது போல் தெரிகிறது: நாம் பேசிவிட்டு வெளியேற வேண்டும், இல்லையா?”  என்று கேட்டதற்கு, அஜித், "ஆம், சரி" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. சிவசேனா (யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி இது தொடர்பாக மகாராஷ்டிர அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.

விலைவாசி உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் விலை உயர்வு மனிதன் மோடி" என்ற தலைப்பில் ஒரு கிராஃபிக்கில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத பருப்புகளின் விலையை காங்கிரஸ் ஒப்பிட்டுப் பார்த்தது. கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சிம்லாவில் உள்ள ஷிவ் பவாடிக்கு வருகை தந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார், அங்கு அவர் நிலச்சரிவில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களைச் சந்தித்ததை தொடர்ந்து அவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment