Advertisment

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்: சத்தீஸ்கர் மாநில வழக்கறிஞர் கைது - மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை

Shah Rukh Khan death threat: ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து போனில் அழைத்த நிகழ்வின் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கத்தை போலீசார் குறிப்பிடவில்லை.

author-image
WebDesk
New Update
SRK 1

கடந்த செவ்வாய்கிழமை, மும்பையில் உள்ள பாந்த்ரா காவல் நிலையத்திற்கு, தன்னை 'இந்துஸ்தானி' என அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அழைப்பு வந்தது. (File photo)

கடந்த வாரம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரூ. 50 லட்சம் கேட்டதாக சத்தீஸ்கரின் ராய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை மும்பை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Mumbai police arrest Chhattisgarh lawyer in connection with threat call to Shah Rukh Khan

ராய்ப்பூர் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், ஃபைசான் கான் (42) கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். மேலும், அவர் மும்பை காவல்துறையினரால் நகரின் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை, ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை காவல்துறையினரால் பைசானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால், அவர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

ஷாருக்கானைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்ததன் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கத்தைப் பற்றி மும்பை மற்றும் ராய்ப்பூர் போலீசார் குறிப்பிடவில்லை.

முன்னதாக, ஃபைசான் கான் தனது மொபைல் போன் திருடப்பட்டதாகவும், வேறொருவர் மும்பை காவல்துறையை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கு தன்னைக் குற்றம் சாட்டுவதாகவும் கூறினார்.

கடந்த செவ்வாய் கிழமை, மும்பையில் உள்ள பாந்த்ரா காவல் நிலையத்திற்கு, தன்னை 'இந்துஸ்தானி' என அடையாளப்படுத்திக்கொண்டு, பாந்த்ராவில் உள்ள ஷாருக்கானின் இல்லமான மன்னத்திற்கு வெளியே தான் நின்று கொண்டிருப்பதாகவும், தனக்கு ரூ.50 லட்சம் தரவில்லையென்றால், ஜவான் நடிகரைக் கொல்லப்படுவார் என்று ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் அழைப்பு வந்தது.

ராய்ப்பூரைச் சேர்ந்த பைசான் கான் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததை மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் ஃபைசானை கண்டுபிடித்த பிறகு, நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ம் தேதி தனது மொபைல் போன் திருடப்பட்டதாக அவர்களிடம் கூறினார். மேலும், தனது போன் திருடப்பட்டதாக உள்ளூர் போலீசில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரை மும்பைக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் வரவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சிறிய குற்றத்திற்காக ஃபைசான் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஷாருக்கானின் அஞ்சாம் (1994) திரைப்படத்தில் மான் வேட்டையாடுவதைக் குறிப்பிடும் வசனம் தொடர்பாக ஷாருக்கானுக்கு எதிராக மும்பை காவல்துறையில் ஃபைசன் முன்பு புகார் அளித்திருந்தார்.

பாரதிய நியாய சன்ஹிதா(பி.என்.எஸ்) சட்டப்பிரிவில், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் தொடர்பான பிரிவுகள் 308(4) மற்றும் 351 (3)(4) ஆகியவற்றின் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்தனர். கொலை மிரட்டல் அழைப்பிற்குப் பிறகு காவல்துறை ஷாருக்கானின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment