/tamil-ie/media/media_files/uploads/2019/08/Shalija-Dhami-Shaliza-Dhami-flight-commander.jpg)
விமானத் தளபதி ஷாலிஜா தாமி
Shalija Dhami: இந்திய விமானப்படையின் ’விங் கமெண்டர்’ ஷாலிஜா தாமி, ஃப்ளையிங் யூனிட்டுக்கான ஃப்ளைட் கமெண்டர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் அதிகாரியும் தாமி தான்.
ஆசியாவின் மிகப்பெரிய விமானப்படையான, உத்திர பிரதேசத்திலுள்ள ஹிண்டன் விமானப் படையிலுள்ள, சேடக் ஹெலிகாப்டர் பிரிவின் விமானத் தளபதியாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
சேடக் ஹெலிகாப்டர், பயணம், சரக்கு / பொருள் போக்குவரத்து, விபத்திலிருந்து பாதிக்கப்பட்டோரை வெளியேற்றுவது, மீட்புப்பணி, வான்வழி ஆய்வு, பேட்ரோலிங் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஹெச்.ஏ.எல் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
விங் கமாண்டர் தாமி, 15 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வருகிறார். விமானப்படையின் முதல் பெண் ஃப்ளையிங் பயிற்றுவிப்பாளரான, இவர் தான் முதன் முதலில் ஃப்ளையிங் கமிஷனால் நிரந்தரம் செய்யப்பட்டவரும் ஆவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.