/indian-express-tamil/media/media_files/jmmYQChDRShGrOtJNvZn.jpg)
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தனார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடாவுக்கு 30 வயதில் இளைஞர் நண்பர் உள்ளார். ரத்தன் டாடாவின் நம்பிக்கைகுரிய நெருங்கிய உதவியாளரும், நண்பருமான சாந்தனு நாயுடு டாடாவின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இவர்கள் இருவரின் நட்பு மிகவும் சுவாரஸ்யமானது, அழகானது. இருவருக்கும் செல்லப் பிராணி நாய்கள் மீதான அன்பால் இணைந்தனர்.
சாந்தனு, ரத்தன் டாடாவை முதல் முதலில் சந்தித்த சுவாரஸ்ய நிகழ்வு பற்றி ஒரு கடிதத்தில் கூறியுள்ளார். அதில், "நான் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி படிக்க செல்வதற்கு முன் நான் எழுதி கடிதத்திற்கு டாடாவிடம் இருந்து பதில் கிடைத்தது. முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
இரவு விருந்துக்கு டாடா என்னை அழைத்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன். டாடாவை கவர வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆடம்பர பிராண்டான 'ப்ரூக்ஸ் பிரதர்ஸ்' என்ற பிராண்ட்டில் இருந்து சட்டை வாங்கி அணிந்தேன்.
'ப்ரூக்ஸ் பிரதர்ஸ்' என்ற பிராண்ட் ரத்தன் டாடாவின் விருப்பமான ஆடை பிராண்ட்டாகும்.
டாடா இந்த பிராண்ட் சட்டை அணிந்திருந்ததை நான் கவனித்தேன். என் மாதச் சம்பளத்தில் பாதியை செலவழித்து அதை வாங்கி அணிந்தேன்.
பின்நாளில் அந்த சட்டை தவறுதலாக கிழிந்துவிட்டது. அதை டாடா எப்படியோ கண்டுபிடித்தார். நான் அமெரிக்காவில் இருந்த போது அவ்வப்போது டாடாவும் அங்கு வரும் போது சந்திப்போம்.
அப்படி ஒரு நாள், டாடா அமெரிக்காவில் அதே போன்ற சட்டையை தேடி எனக்கு வாங்கி கொடுத்தார். நான் அவரிடம் வேண்டாம் என்று கூறி பில்லிங் கவுண்டரில் வற்புறுத்தினேன். அப்போது டாடா, “நான் என் நண்பருக்கு ஒரு சட்டை வாங்கி கொடுக்க கூடாதா?” " என்றார்.
இது அவர்கள் இருவரின் நட்பு எவ்வளவு அன்பானது என்பதை காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.