டாட்டா குழும தலைவருடன் வேலை பார்ப்பது தான் கனவு – 27 வயது இளைஞனின் வெற்றி கதை!

ஒரு நாள் எனக்கு போன் செய்து ”எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. என்னுடைய உதவியாளராக பணியாற்றுகிறாயா?” என்று கேட்டார் ரதன் டாட்டா!

By: November 21, 2019, 11:42:13 AM

Shantanu Naidu works for Ratan Tata : தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் முக்கியமான மனிதர்களில் ஒருவருமான ரதன் டாட்டாவிடன் வேலை செய்வதை தன்னுடைய கனவு வேலையாக வைத்திருந்த இளைஞர் ஒருவரின் வெற்றிப்பாதை இது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பக்கங்களில் ஒன்று தான் ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே (Humans of Bombay). அதில் 27 வயதான சாந்தனு நாயுடு என்பவர் குறித்த ஒரு ஆச்சரியமான கட்டுரை வெளியானது.

அதில் ரதன் டாட்டாவை முதன்முதலாக தான் எப்படி 2014ம் ஆண்டு சந்தித்தேன் என்றும், அது எப்படி 5 வருடத்தில் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்றும் கூறியிருக்கிறார் சாந்தனு. சாந்தனு இயல்பிலேயே நாய்கள் மீது அதிக பிரியம் வைத்திருப்பவர். சில வருடங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று இறந்ததை நேரில் பார்த்த சாந்தனு மிகவும் மனமுடைந்து போனார். அதனைத் தொடர்ந்து இனிமேல் எந்த நாய்களும் சாலை விபத்தில் உயிரிழந்து போகக்கூடாது என்பதை மனதில் கொண்டு ரெஃப்லெக்டர்களுடன் கூடிய காலர்களை கண்டறிந்தார்.

அவருடைய அந்த புதிய தொழில்நுட்பம் டாட்டா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் வரை பரவியது. நீ ஏன் இது குறித்து ரதன் டாட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதக்கூடாது என என் அப்பா என்னிடம் கேட்டார். நான் ஆரம்பத்தில் கொஞ்சம் யோசனை செய்தாலும் பிறகு சரி என்று ஒத்துக் கொண்டேன். என்னுடைய கடிதம் ரதன் டாட்டாவை சேர, அவர் ஒரு நாள் என்னை சந்திக்க விரும்பினார். இதை என்னால் நம்பவர முடியவில்லை.

சில நாட்கள் கழித்து நான் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் “உங்களின் வேலையால் நான் மிகவும் பிரமித்து போனேன்” என்று அவர் கூறினார். இந்த நொடியை என் வாழ்வில் நான் மறக்கவே மாட்டேன். அவர் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். அவருடைய செல்லப்பிராணிகளின் கழுத்தில் நான் கண்டுபிடித்த காலர் இருந்தது. அதனை பார்க்கும் போது நான் மிகவும் மகிழ்ந்து போனேன்.

அன்று ரதன் டாட்டாவை சந்தித்துவிட்டு திரும்பிய சாந்தனு முதுகலை பட்டம் பெற்றார். நான் அப்போதே ரதன் டாட்டாவிடம் தெரிவித்தேன். நிச்சயமாக நான் திரும்பி வந்து டாட்டா அறக்கட்டளையில் வேலைக்கு சேர்வேன் என்று. படிப்பினை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய எனக்கு ஒரு நாள் அவர் அழைப்பு விடுத்தார். அப்போது “எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. என்னுடைய உதவியாளராக பணியாற்றுகிறாயா?” என்று கேட்டார். எனக்கு சொல்வதென்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஆம் என்றேன்.

மேலும் படிக்க : இஸ்லாமிய பேராசிரியருக்கு ஆதரவாக போராடும் இந்து பல்கலைக்கழக மாணவர்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Shantanu naidu works for ratan tata humans of bombay success story of 27 year old

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X