Advertisment

தேசிய விரிவாக்கத்தை நோக்கும் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி சித்தாந்தத்தில் தயக்கம்

அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை தேசிய அளவில் விரிவாக்கம் செய்யும் நோக்கில் இருக்கும் அதே வேளையில், ஆம் ஆத்மி சித்தாந்தத்தில் தயக்கம் காட்டி வருகிறது.

author-image
WebDesk
New Update
தேசிய விரிவாக்கத்தை நோக்கும் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி சித்தாந்தத்தில் தயக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் (AAP) சித்தாந்தம் என்ன? ஊழலுக்கு எதிரான இந்தியா (ஐஏசி) என்ற பொது இயக்கத்தில் இருந்து வளர்ந்த ஒரு அரசியல் கட்சி அதன் தொடக்கத்திலிருந்தே இந்த கேள்வியை எழுப்பி வருகிறது.

Advertisment

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இதுவரை இந்த கேள்வியில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டி வருகிறது. அதற்கு பதிலாக "நல்லாட்சி மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன்" தங்களை ஒரு கட்சியாக காட்டிக்கொள்ள கவனம் செலுத்துகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் மாநாடு டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி அதன் "விசார்தாரா (சித்தாந்தம்)" மீது நிலைத்து இருக்க வேண்டிய நேரம் இது. தீவிர தேசபக்தி, நேர்மை, மற்றும் மனிதநேயம் ஆகியவை ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தில் இருக்கும் மூன்று தூண்கள் என்று கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அவர் இதேபோன்ற வலியுறுத்தலைக்" கூறினார்.

பின்னர் கெஜ்ரிவால் தங்கள் சித்தாந்தத்தை பா.ஜ,க சித்தாந்தத்துடன் வேறுபடுத்தினார். கருத்தியல் ரீதியாக "குண்டர்" என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஊழலைக் குறிக்கிறது என்றும் சாடினார். இதிலும் கூட பா.ஜ,கவின் சித்தாந்தத்தை இந்துத்துவா என்று பெயரிடவும் அவர் மறுத்து விட்டார்.

குஜராத்தில் காங்கிரஸின் வாக்கு சரிவடைந்த நிலையிலும், பா.ஜ.கவின் வாக்கு வங்கியை கட்சி உண்மையில் பிரிக்கவில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் பா.ஜ.க-வை எதிர்க்கையில் அது பா,ஜ.கவின் சித்தாந்தத்துடன் மோதுகிறது. இந்துத்துவா மற்றும் இந்து மதம் பற்றி விவாதிக்கப்படுகிறது. ஆம் ஆத்மிக்கு அந்த இடத்தில் பலன் இல்லை. கருத்தியல் முன்னணியில் கட்சியின் உருவாக்கங்களில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை."

கெஜ்ரிவாலின் பேச்சு, இந்த பிரச்சினையில் மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு சிறிய வாய்ப்பை பிரதிபலிக்கிறது. அவரது சட்டமன்ற உரையில், மனிதநேயம் ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தின் மூன்றாவது "தூணாக" உள்ளது என்று கூறினார்.

ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவர் கூறுகையில், மனிதநேயம் என்பது மனிதர்களுக்கு இடையிலான சகோதரத்துவம், மதம், சாதி சண்டைகளை கடந்தது என்றார். "எல்லா மனிதர்களும் சமமானவர்கள்," என்று அவர் வலியுறுத்தினார்.

கட்சி பல சமூகங்களை சென்றடைய முயற்சிக்கும் போதிலும், டெல்லியில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. ஆம் ஆத்மியின் சித்தாந்தம் என்ன? அல்லது அதில் கட்சி பின்தங்கி உள்ளதா? என்ற விவாதம் கட்சியின் வளர்ந்து வரும் அந்தஸ்தின் காரணமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களை கைப்பற்றிய பின்னர், குஜராத்தில் ஐந்து இடங்கள் கிட்டத்தட்ட 13 சதவீத வாக்குகளுடன் வென்று இப்போது தேசிய கட்சி அந்தஸ்தை அடைந்துள்ளது. கட்சியை மேலும் விரிவுபடுத்துவதில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தி வருகிறார்.

எவ்வாறாயினும், ஆம் ஆத்மி கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிடும் மாநிலங்கள் குறித்த எந்த உறுதியான முடிவையும் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் எடுக்கவில்லை.

“2023-ம் ஆண்டு பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா தேர்தலுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது. மேலும் மிகக் குறைந்த இடமே உள்ளது. குஜராத்தைப் போலல்லாமல், கர்நாடகாவில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை ஆய்வு செய்து வருகிறது. 2024-ம் ஆண்டு தேர்தலுக்குச் செல்லும் ஹரியானாவில் குஜராத்தில் போட்டியிட்டதைப் போலவே ஆம் ஆத்மி அங்கு போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், உத்தரகாண்ட், கோவா போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மியின் மோசமான செயல்பாடு மற்றும் சமீபத்தில் இமாச்சல பிரதேச தேர்தல் தோல்வி ஆகியவை குறித்து கட்சி ஆய்வு செய்து வருகிறது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment