Advertisment

’கோயில் கட்டுவது கொரோனாவை ஒழிக்கும் என நினைக்கிறார்கள்’ - சரத் பவார் கருத்து

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுமாறு பிரதமர் மோடிக்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, என்.சி.பி தலைவர் சரத் பவார் கோயில் கட்டுவது கோவிட்-19 தொற்று நோயை ஒழிக்க உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sharad pawar on ram temple, ncp chief sharad pawar, prime minister narendra modi, ராமர் கோயில் கட்டுவதற்கு தேதி குறிப்பு, ராம ஜென்மபூமி கோயில் அறக்கட்டளை, சரத் பவார், பிரதமர் மோடி, Ram temple Trust, bhoomi pujan, Babri Masjid site, ram temple verdict, Ayodhya news, Ram temple Trust fixing date, tamil indian express news

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை கோவிலைக் கட்டுவது கோவிட்-19 தொற்று நோயை ஒழிக்க உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

“COVID-19ஐ ஒழிப்பது மகாராஷ்டிரா அரசாங்கத்தின் முன்னுரிமை. ஆனால், சிலர் கோயில் கட்டுவது கோவிட்-19ஐ தணிப்பதற்கு உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள்” என்று சரத் பவார் சோலாப்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார். பி.டி.ஐ செய்தி நிறுவனம் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட முன்மொழியப்பட்ட தேதி குறித்து கேட்டபோது என்.சி.பி தலைவர் சரத் பவார் இவ்வாறு கூறினார்.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டும் தேதியை தீர்மானிக்க ராம ஜென்மபூமி அறக்கட்டளை சனிக்கிழமை கூடியது. சில மாதங்களுக்கு முன்பு தொடங்கவிருந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது.

ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நயன் தாஸ், “நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இயக்கங்களின் கணக்கீடுகளின் அடிப்படையில் பிரதமரின் வருகைக்கு ஆகஸ்ட் 3 மற்றும் 5 ஆகிய இரண்டு நல்ல தேதிகளை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்றார்.

“பூமி பூஜை பிரதமரால் செய்யப்பட வேண்டும் என்று முழு நாடும் கருதுகிறது” என்று அறக்கட்டளையின் 15 உறுப்பினர்களில் ஒருவரான காமேஷ்வர் சௌபால் கூறினார். மேலும், அவர், நாட்டின் நிலைமை, எல்லை மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரதமர் பொருத்தமாக இருக்கும் என்று கருதும்போது கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

தற்செயலாக, ஆகஸ்ட் 5ம் தேதி என்பது 370 வது பிரிவி திருத்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததன் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

நவம்பர் 2019 இல், 370 வது பிரிவை திருத்தம் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி - பாபர் மசூதி இடத்தை கோயில் கட்டுவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு மசூதிகாகாக 5 ஏக்கர் பரப்பில் மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

Narendra Modi Ayodhya Temple Sharad Pawar Ram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment