AIADMK Could Join I N D I A Bloc : அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த மறுநாளே, திராவிட கட்சியை ஐ.என்.டி.ஐ.ஏ-வில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று சரத் பவாரிடம் (Sharad Pawar) கேள்விகள் எழுப்பப்பட்டன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) ஐ.என்.டி.ஐ.ஏ-வின் கீழ் கொண்டு வருவது தொடர்பான முடிவு குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அதன் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசிக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை (செப்.26) தெரிவித்தார்.
அதிமுக பாஜகவுடனான தனது நான்கு ஆண்டுகால உறவை முடித்துக்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த அறிக்கை வந்துள்ளது.
பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக ஐ.என்.டி.ஐ.ஏ.வின் கூட்டாளி. திமுக அல்லது ஸ்டாலினிடம் கலந்தாலோசிக்காமல் இது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாது” என்றார்.
ஐ.என்.டி.ஐ.ஏ. 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்ட 28 கட்சிகளின் கூட்டணி எதிர்க்கட்சிகளின் கூட்டாகும்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்ததற்கும் பவார் பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு மனதுடன் ஆதரித்ததாகவும் ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு அது குறித்து சரியாக தெரிவிக்கவில்லை என்றும் பவார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“