scorecardresearch

என்.சி.பி-யில் இருந்து அஜித் பவார் விலகல் குறித்து பேச்சு… உண்மை இல்லை – ஷரத் பவார்

காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் தன்னையும், சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரேவையும் சந்திக்க வந்ததாக ஷரத் பவார் கூறினார்.

Ajit Pawar, Sharad Pawar, Nationalist Congress Party, NCP, BJP, Bharatiya Janata Party, Maharashtra Deputy Chief Minister, Leader of the Opposition, Maharashtra Legislative Assembly, அஜித் பவார் விலகல் குறித்து பேச்சு, உண்மை இல்லை, ஷரத் பவார் , என்சிபி, மகாராஷ்டிரா, பாஜக, MLAs, Political speculation, NCP state president Jayant Patil, Supriya Sule, Sanjay Shirsat, Shiv Sena MLA, Uddhav Thackeray, Eknath Shinde, Anna Bansode, Manikrao Kokate, Nitin Pawar, Mumbai politics
NCP

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு அஜித் பவார் தாவக்கூடும் என்ற பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நாளில், அவருடைய கட்சித் தலைவரும் என்.சி.பி தலைவருமான ஷரத் பவார், இத்தகைய ஊகங்களில் உண்மை இல்லை என்று கூறி எம்.வி.ஏ-வின் கூட்டணியை அமைதிப்படுத்த முயன்றார்.

அஜித் பவார் பா.ஜ.க-வுக்கு தாவுவது குறித்து செவ்வாய்கிழமை புரந்தரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஷரத் பவார், “அதில் எந்த உண்மையும் இல்லை… தற்போது ஊடகங்களில் (அஜித் பவார் பற்றி) நடந்து கொண்டிருக்கும் விவாதம் எங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை. நாங்கள் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. என்.சி.பி சார்பாக இதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்… என்.சி.பி-யை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எனக்கு கூட்டங்கள் எதுவும் இல்லை. இன்று நான் மும்பை செல்கிறேன்.” என்று கூறினார்.

என்.சி.பி கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “தற்போது தனது சொந்தப் பகுதியில் பிஸியாக இருக்கிறார். அஜித் பவார் கட்சியின் தரவரிசை, கோப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறார்” என்று கூறினார்.

“நான் தெளிவுபடுத்திய பிறகு, நான் சொல்வதற்கு நீங்கள் வேறு அர்த்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அஜித் பவாரை மையமாக வைத்து நடத்தப்படும் விவாதங்களில் உண்மையில்லை. மற்றவர்கள் சொல்வதை விட நான் என்ன சொல்கிறேன் என்பதுதான் முக்கியம்” என்று ஷரத் பவார் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் தன்னையும், சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரேவையும் சந்திக்க வந்ததாகவும் ஷரத் பவார் கூறினார். நாங்கள் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தும் திட்டம் குறித்து விவாதித்தோம் என்று கூறினார்.

உத்தவ் தாக்கரே, சேனா எம்பி சஞ்சய் ராவத், சுலே மற்றும் சில தலைவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சில மணிநேரங்களுக்குப் பிறகு ஷரத் பவாரின் கருத்துக்கள் வந்தன. ஆனால், அஜித் பவார் இடம் இருந்து எந்த கருத்தும் வரவில்லை.

இதற்கிடையில், குறைந்தது மூன்று என்.சி.பி. எம்.எல்.ஏ.க்கள் – பிம்ப்ரியில் இருந்து அன்னா பன்சோட், சின்னாரில் இருந்து மாணிக்ராவ் கோகடே மற்றும் நாசிக்கில் இருந்து நிதின் பவார் – வெளிப்படையாக அஜித் பவாருக்கு ஆதரவாக வந்தனர். “நான் அஜித் பவாரின் விசுவாசி. அஜித் பவார் எந்த முடிவை எடுத்தாலும் நான் அவருக்கு ஆதரவளிப்பேன்.. 2019-ல் அவர் பா.ஜ.க-வுடன் கைகோர்த்தபோதும் அதையே செய்தேன். கடைசி வரை அஜித் தாதாவுடன் இருந்தேன்” என்று பன்சோடே கூறினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ராவத், பா.ஜ.க என்.சி.பி-யை உடைக்க முயற்சி செய்கிறது. ஆனால், வெற்றிபெறாது என்றார். “ஏக்நாத் ஷிண்டே முகாமைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்னிட்டு பா.ஜ.க. முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்… பா.ஜ.க என்.சி.பி-யை பிளவுபடுத்த முயற்சி செய்கிறது. ஆனால், அது வெற்றி பெறாது, என்ன வந்தாலும் வெற்றி பெறாது.” என்று கூறினார்.

அஜித் பவார் மீதான ஊகங்கள் குறித்து ராவத் கூறுகையில், ​​“இது பா.ஜ.க-வின் வேலை. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலை. அது ஒரு பிளவை உருவாக்க முயற்சி செய்கிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்காது. இந்த ஊகங்கள் எம்.வி.ஏ கூட்டணியின் ஒற்றுமையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Sharad pawar says no truth in talk of ajit defection