ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (அக்.7) முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் முதலமைச்சர் அசோக் கெலாட்டை, தொழிலதிபர் கௌதம் அதானி பெருமைப்படுத்தினார்.
இருவரும் மாநாட்டில் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். தொழிலதிபர் கௌதம் அதானியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துவரும் நிலையில் இது பேசுபொருளானது. தற்போது பாஜக எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இது நடந்த சில மணி நேரங்களுக்கு பின்னர் பாரத் ஜோடோ யாத்திரையில் கர்நாடகாவில் இருந்த ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானி குறித்து பேசினார்.
அப்போது, உலகின் இரண்டாவது பணக்காரர் இந்தியப் பிரதமருக்கு நெருக்கமானவர். ஆனால், அவர் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருந்ததில்லை. உண்மையில், அவர் பட்டியலில் கூட இல்லை” என்றார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சார துறையில் வரும் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என கௌதம் அதானி உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், "எந்த முதலீட்டாளர் மாநிலத்தின் சட்டம் மற்றும் விதிகளைப் பின்பற்றுகிறாரோ, எங்கள் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறாரோ அவரை எனது அரசாங்கம் வரவேற்கும் என்று கூறினார்.
அதானி தனது உரையில் கெலாட்டின் சமூக நலத் திட்டங்களைப் பாராட்டினார். அப்போது, “நீங்கள் செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள், டிரெண்ட்செட்டர்கள் மற்றும் வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன” என்றார்.
மேலும், “ராஜஸ்தானை நமது நாட்டின் சூரிய சக்தித் தலைவராக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது” என்றும் கூறினார்.
இந்த நிலையில் தனது உரையில் கெலாட் குஜராத்திகளை வெகுவாக புகழ்ந்தார். அப்போது சுதந்திரத்துக்கு முன்பும் குஜராத்திகள் ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் கொடிகட்டி பறந்தனர்.
மேலும் அதானியை சகோதரா (பாய்) என அழைத்தார். இதனை பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜகவின் ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா ட்விட்டரில், “காந்திகளுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் அதிருப்தியின் மற்றொரு அடையாளமாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கௌதம் அதானியை முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைத்துள்ளார். அவருக்கு முதல்வரின் அருகில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அதானி-அம்பானியை குறை சொல்வதில் சோர்வடையாத ராகுல் காந்திக்கு இது ஒரு திறந்த செய்தியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய “கருணை இல்லாத ஆட்சி”- அர்ஜுன் சம்பத், நாங்கள் நிச்சயமாக வணிகங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. லாபம் கெட்ட வார்த்தை என்று நாங்கள் நினைக்கவில்லை.
ஆனால் ஒருவருக்கு துறைமுகம், ஒருவருக்கு விமான நிலையம், ஒருவருக்கு வங்கிக் கடன், ஒருவருக்கு 5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி ஆகியவற்றை எதிர்க்கிறோம்” என்றார்.
மேலும், அம்பானி, அதானியுடன் காங்கிரஸிற்கு பிரச்னை இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை விமர்சித்துள்ள மாநில பாஜக தலைவர், “நேற்று எதிரி, இன்று நண்பன். பணத்தின் மீது நம்பிக்கை கொண்டு, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“