மும்பையில் நேற்று சொகுசு கப்பலில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) ரெய்டு நடத்தியது. அதனையடுத்து, தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யா கான் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
என்சிபி சோதனையால் கப்பலில் நடக்கவிருந்த ரெவ் பார்ட்டி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்,கப்பலில் இருந்து கோகைன், மெஃபெட்ரோன், எக்ஸ்டசி உட்பட பல போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் தவிர, ஏழு பேர் - முன்முன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மொஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர், கோமித் சோப்ரா மற்றும் அர்பாஸ் வியாபாரி - முன்பு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் மனோதத்துவ பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் அறிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன, அதைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று ஒரு அதிகாரி கூறினார்.
என்சிபி அதிகாரிகள் கூற்றுப்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவா செல்லும் பயணிகள் கப்பலில் ரெவ் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், என்சிபி அதிகாரிகள் பயணிகள் போல படகில் ஏறினர்.
படகு மும்பையில் இருந்து கிளம்பி கடலுக்குள் பயணித்த போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டோரின் உடமைகளை என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil