காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், 'அவையை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு, அவர்கள் எதிர்க்கட்சிகளை அணுகி, அவை செயல்படுவதைப் பார்க்க அவர்களுடன் சமரசம் செய்ய வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “புதன்கிழமை சபாநாயகர் மனம் புண்பட்டதை எண்ணி வருந்தினோம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாரதிய ஜனதா இவ்வாறு நடந்துக்கொண்டது.
எதற்காக எதிர்க்கட்சிகள் இவ்வாறு நடந்துக்கொள்கின்றன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். மணிப்பூரில் 60 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
வீடுகள், தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஒரு அமைச்சரின் வீடு கூட தீக்கிரையானது. நமது நாட்டில் இதை விட தீவிரமான பிரச்னை என்னவாக இருக்க முடியும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார். அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் வந்து பதில் சொல்ல வேண்டும்.
இதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. 2002இல் நடந்த குஜராத் கலவரம் குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சபையில் பேசியது உள்பட முன்னுதாரணங்கள் உள்ளன. ஆகவே இது நியாயமான கோரிக்கைதான்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“