தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்ட 6 பெண் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில், லோக் சபா வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் சொன்னது? என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தமிழச்சி தங்கபாண்டியன் 6 பெண் எம்.பி.க்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு லோக் சபா எப்படி வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் என்று கமெண்ட் செய்ததையடுத்து அவர் சர்ச்சையில் சிக்கினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் வந்த இப்பதிவு, பாலியல் (Sexist) ரீதியாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த புகைப்படத்தில் சசி தரூர், சுப்ரியா சுலே, பிரனீத் கவுர், தமிழச்சி தங்கபாண்டியன், மிமி சக்ரபர்த்தி, நுஸ்ரத் ஜஹான் மற்றும் ஜோதிமணி ஆகியோருடன் உள்ளார். அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டு, “லோக்சபா வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் சொன்னது?” என்று குறிப்பிட்டார். பின்னர், அவர் ஒரு விளக்கத்தையும் வெளியிட்டார்.
இந்தப் புகைப்படத்தை பணியிட தோழமையின் வெளிப்பாடாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்தப் பதிவால் புண்படுத்தப்பட்டவர்கள் மன்னிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செல்ஃபி விஷயம் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் செய்யப்பட்டது, அதே உணர்வில் அதை ட்வீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன். ஆனால், இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வளவுதான்” என்று சசி தரூர் எழுதியுள்ளார்.
இதற்கு கம்மெண்ட் செய்துள்ள ஒரு ட்விட்டர் பயனர், “வேலை செய்ய கவர்ச்சிகரமான இடமா அல்லது தோழமை நிகழ்ச்சியா?” முந்தைய ட்வீட்டில் உள்ள வார்த்தைகளின் தேர்வு பாலியல் ரீதியாக இருந்தது, பிந்தையது நன்றாக உள்ளது. அவ்வளவுதான்!” என்று என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு ட்விட்டர் பயனர் கூறுகையில், “உண்மையில், அதில் ஏதேனும் தவறு உள்ளதா? என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் 25 நாள் குளிர்காலக் கூட்டத் தொடர் பரபரப்பான கூட்டத்தைக் கண்டது. லோக்சபா எந்த விவாதமும் இல்லாமல் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“