நேற்று இரவு, வருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று நான் அனைத்து சமூக வலைதள கணக்குகளில் இருந்தும் வெளியேறுகின்றேன் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் பலரும், அவரை அப்படி செய்யாதீர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ”நோ சார்” என்ற ஹேஷ்டாக்கினை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றார்கள்.
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
நேற்றைய ட்வீட்டில் இருந்த மர்மம்
நேற்று (02/03/2020) அன்று மோடி தன்னுடைய அனைத்து சமூக வலைதள கணக்குகளில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறப் போகின்றேன். அது குறித்து உங்களுக்கு அறிவிப்பினை வழங்குவேன் என்று கூறியிருந்தார். வருகின்ற 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி, தன்னுடைய சமூக வலைதள கணக்குகள் அனைத்தையும் சாதனைப் பெண்களின் பயன்பாட்டிற்கு தருவதாகவும், அந்நாளில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்களின் நல்வாழ்விற்காகவும், அவர்கள் வைத்திருக்கும் எண்ணங்களை மோடியின் சமூக வலைதள கணக்கில் இருந்து பகிர வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை எப்படி பெறுவது?
நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த பெண்கள் சாதனைப் பெண்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அவர்கள் செய்த பணியை உலகம் அறிய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
அவர்களைப் பற்றி ட்விட்டர், இன்ஸ்டாகிராம், மற்றும் முகநூல் பக்கங்களில் #SheInspirresUs என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிடங்கள். நீங்கள் வீடியோ பதிவினையும் வெளியிடலாம். வீடியோவை யூட்யூபில் அதே ஹேஷ்டேக்கில் பதிவிட்டு அவர்களைப் பற்றி அறிவிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மோடியின் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் உங்களின்/அவர்களின் எதிர்கால எண்ணங்கள், திட்டங்கள் மற்றும் கனவுகள் குறித்து பதிவு செய்து அதனை உலகறியச் செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.