Advertisment

இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை, அமைதியான உறவுகளை விரும்பும் பாக்; மோடிக்கு ஷேபாஸ் ஷெரீப் ட்வீட்

சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், ‘பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு’ பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
India-Pakistan, India-Pakistan talks, India-Pakistan relations, Pakistan PM Shehbaz Sharif, India-Pakistan conflict, Narendra Modi, shehbaz sharif, இந்தியா பாகிஸ்தான், ஷேபாஸ் ஷெரீப், இந்தியா பாகிஸ்தான் உறவு, நரேந்திர மோடி, Indian Express, India news, current affairs, Indian Express News Service, Express News Service, Express News, Tamil Indian Express India News

இந்தியாவுடன் அமைதியான மற்றும் ஒத்துழைப்பு உறவுகளைக் நாடுவதாகவும் அதை ‘அர்த்தமுள்ள உரையாடல்’ மூலம் இதை அடைய முடியும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

சண்டே எக்ஸ்பிரஸ்க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீப், ட்விட்டரில் செய்திகளை பரிமாறிக்கொண்ட சிறிது நேரத்திலேயே, பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். மோடி தனது கடிதத்தில், ‘ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கு’ அழைப்பு விடுத்திருந்தார்.

புது டெல்லியில், அதிகாரிகள் பாகிஸ்தானின் பதிலை நேர்மறையானது என்று புரிந்துகொண்டுள்ளனர்.

பிப்ரவரி 2019-ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாலகோட் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இரு நாடுகளும் தூதரகப் பேச்சுவார்த்தைகளைக் குறைத்துள்ளன. மேலும், இரு நாடுகளும் தலைநகரில் முழுநேர முதன்மை தூதர்கள் இல்லை.

ஏப்ரல் 11-ம் தேதி ஷேபாஸ் ஷெரீப், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிப்பதில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருமாறு கேட்டுக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஷேபாஸ் ஷெரீப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மோடி அவரை வாழ்த்தினார். பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது என்று கூறினார்.

“பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.இ. மியான் முகமது ஷேபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள். பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன் மூலம் நமது வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும்” என்று மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதியான மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை விரும்புகிறது.

ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது இன்றியமையாதது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. அமைதியைப் பாதுகாப்போம், நமது மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மோடியின் வாழ்த்து தெரிவித்துள்ள இந்த ட்வீட், ஆகஸ்ட் 2018 -ல் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றபோது அவருக்கு அனுப்பிய கடிதத்தைப் போல உள்ளது.

இம்ரான் கான் பொறுப்பேற்றபோது வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானில் சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும், உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். துணைக் கண்டத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றுடன் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாமல மாற்றுவதற்கும், வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கும் தங்கள் பார்வையைப் பற்றி அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடலை அவர் நினைவு கூர்ந்தார். இம்ரான் கான் பிரதமராவார் என்று தெளிவாகத் தெரிந்த சில நாட்களுக்குப் பிறகு, இருவரும் ஜூலை 2018-ல் பேசினார்கள்.

ஷேபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றவுடன், இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்திற்காக இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் லாகூரில் உள்ள முன்னேற்றங்களை புது டெல்லி எச்சரிக்கை கலந்த நம்பிக்கையுடன் கவனித்து வருகிறது.

ஆட்சி மாற்றம் ராஜதந்திர திறப்பை வழங்கக்கூடும் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜதந்திர உத்தி அமைப்பு வட்டாரங்களின்படி, தாக்கங்கள் தொலைநோக்குடையதாக இருக்கலாம்.

அவரது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பின் நிழலில் இருந்து வெளிவந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவரான ஷேபாஸ், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார் - அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். நவாஸ் ஷெரீப் குடும்பம் இந்தியாவுடனான சிறந்த உறவுகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

இரு நாடுகளின் முக்கிய கவலைகள் ஒரே மாதிரியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இருதரப்பு உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கு ஷேபாஸ் நன்றாக இருக்கிறார்.

இந்தியாவுடனான சிறந்த வர்த்தக உறவுகள் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். பாகிஸ்தான் பஞ்சாபில் சாலைகள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களின் கட்டுமானம் - உள்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக அறியப்பட்ட ஷேபாஸ், அடுத்த 2023 -ம் ஆண்டு பாகிஸ்தான் தேர்தலுக்கு முன் வழங்க ஆர்வமாக உள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment