/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1335.jpg)
sheila dikshit former delhi cm passed away - தொடர்ந்து மூன்று முறை டெல்லியை ஆட்சி செய்த ஷீலா தீக்ஷித் காலமானார்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வரும் ஷீலா தீக்ஷித் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஷீலா தீக்ஷித், டெல்லியை 1998லிருந்து 2014 வரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி செய்தவர். காங்கிரஸ் கட்சியின் மிக மூத்தத் தலைவரான ஷீலா தீக்ஷித், இன்று காலை வழக்கமான உடல்நல பரிசோதனைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
1998ம் ஆண்டு டெல்லியில் முதன் முதலாக முதல்வராக பதவியேற்றது முதல், வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் டெல்லியை நெருங்க முடியாத அளவுக்கு வலிமையான முதல்வராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். 2000ம் ஆண்டு காலக்கட்டத்திற்குப் பிறகு, டெல்லி பிரதேசத்தின் பெரு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும், டெல்லிக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.