scorecardresearch

பாகிஸ்தானில் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சுஷ்மா

தன் மகளை மீட்டு தரக்கோரி ஒருவர், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு வீடியோ மூலம் உணர்வுப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சுஷ்மா

பாகிஸ்தானில் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளை மீட்டு தரக்கோரி ஒருவர், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு வீடியோ மூலம் உணர்வுப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். அப்பெண்ணை மீட்க தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சை உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக வர நினைப்பவர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்து வருகிறார். குறிப்பாக, உதவி தேவைப்படுவோர் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் பக்கத்திலேயே அவரை தொடர்புகொண்டு அணுக முடிகிறது. அவரும் ட்விட்டரிலேயே பதிலளித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த மொஹத் அக்பர் என்பவர், பாகிஸ்தானில் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளை மீட்டு தருமாறு உருக்கமான வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அக்பர் கூறியுள்ளதாவது,

அவரது மகள் மொஹம்மதி பேகமுக்கு, மொஹத் யோனிஸ் என்பவருடன் கடந்த 1996-ஆம் ஆண்டு திருமணமானது. ஆனால், திருமணத்திற்கு பிறகே யோனிஸ் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது மகளுக்கு இந்த உண்மை தெரியவந்தபின், யோனிஸ் தன் மகளை துன்புறுத்துவதாக அக்பர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதனால், தன் மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ”அவள் இந்தியாவின் மகள். இந்தியாவுக்கு வருவதில் டிக்கெட் தான் பிரச்சனை என்றால், அதனை நாங்களே வழங்கி மொஹம்மதி பேகம் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்போம்”, என தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Shes indias daughter sushma swaraj assures helps to indian woman stranded in pakistan