Advertisment

இறந்தவர் உடலை பெற 8 லட்சமா? மருத்துவமனைக்கு பாடம் புகட்டிய சிவசேனா தலைவர்

நோயாளிகள் மீது மருத்துவர்கள் கொஞ்சம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள்... அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shiv Sena leader Nitin Nandgoankar creates ruckus at private hospital over release of covid19 victim's body

Shiv Sena leader Nitin Nandgoankar creates ruckus : அதிக அளவு கொரோனா பாதிப்புகளை சந்திப்பது மகாராஷ்ட்ரா மாநிலம் தான். அங்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பலரும் தங்களின் சக்திக்கு மீறிய அளவு கட்டணத்தை கட்டி தங்களின் உறவினர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisment

மும்பையில் ஆட்டோ ஓட்டும் நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை அவரின் உறவினர்கள் ஹீராநந்தனி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவரால் வெற்றி பெற இயலவில்லை. மரணமடைந்த அவரின் உடலை உறவினர்களுக்கு தர மருத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிவசேனா தலைவர் நிதின் நந்த்கோவான்கர் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று மருத்துவமனை நிர்வாகிகளை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், மருத்துவர்கள் நோயாளிகள் மீது கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பு மருந்து : அடுத்த மூன்று மாதங்களுக்கு மாபெரும் இலக்குடன் சீரம் இன்ஸ்டிட்யூட்

மேலும் இறந்த போன நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் ஏற்கனவே ரூ. 1,75,000-ஐ செலுத்திவிட்டனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கும் ரூ. 8 லட்சத்தையும் கட்டினால் மட்டுமே உடலை உறவினர்களுக்கு வழங்க முடியும் என்று மருத்துவர்கள் தரப்பு கூறியதாக அவர் கூறுகிறார்.

மேலும் படிக்க : மகிழ்ச்சி..! சென்னையில் குணம் அடைவோர் விகிதம் அதிகரிப்பு, மண்டலம் வாரியாக விவரம்

இந்த இக்கட்டான சூழலிலும் மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் மருத்துவர்களை நான் மதிக்கின்றேன். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனாலும் தனியார் மருத்துவமனைகள் தரும் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் இருந்து கொள்ளை அடிப்பதா என்றும் அவர் கூறியுள்ளார். வியாழக்கிழமை இந்த விவகாரம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் 2 மணி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு சென்று வாதம் செய்துள்ளார். அதன் பிறகு இறந்த நபரின் உடல் பெறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

நிதின் இது போன்று நடந்து கொள்வது ஒன்றும் முதல் முறையில்லை. சிவ சேனாவின் மகாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனாவில் உறுப்பினராக இருந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். மத்துங்கா ரயில் நிலையத்தில் பெண்களை தேவையில்லாமல் வம்பு செய்கிறார் என்று ஒருவரை தாக்கியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment