அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாகியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸில் கோவிலுக்கு வெளியே சுதிர் சூரி மற்றும் சிவசேனா கட்சியின் சில தலைவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவசேனா தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கியால் சுட்டதாக ஒரு நபர் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அமிர்தசரஸ் நகரின் பரபரப்பான இடங்களில் ஒன்றான மஜிதா சாலையில் உள்ள கோபால் கோயிலுக்கு வெளியே சுதிர் சூரி மற்றும் சிவசேனா கட்சியின் வேறு சில தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
சிவசேனா பிரிவு தலைவர் சுதிர் சூரி வெள்ளிக்கிழமை மதியம் கோயிலுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தீப் சிங் என்பவர் சூரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. சுதிர் சூரி சாலையை மறித்து போராட்டம் நடத்திய தர்ணா இடத்திற்கு அருகில் குற்றவாளி ஒரு கடை நடத்தி வருகிறார்.
சுதிர் சூரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 5க்கும் மேற்பட்ட துப்பாக்கியால் சுட்டுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர்கள் போலீசார் தெரிவித்தனர்.
சுதிர் சூரி நீண்ட காலமாக பல கேங்க்ஸ்டர்களின் ஹிட் லிஸ்டில் இருந்தார். மேலும், அவருடன் சுமார் 8 பஞ்சாப் போலீஸ்காரர்களின் பாதுகாப்புப் பெற்று வந்தார் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வானி சர்மா கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"