கடந்த ஆண்டு, ஆர்வலர் மற்றும் முன்னாள் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான நவீன் தலால் மீண்டும் ஒரு புதிய அவதாரத்தில் வந்துள்ளார். அக்டோபர் 21 ம் தேதி ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக பகதூர்கரில் இருந்து சிவசேனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தலால் ஆறு மாதங்களுக்கு முன்பு சேனாவில் சேர்ந்தார், ஏனெனில் "தேசியவாதம் மற்றும் பசு பாதுகாப்பு" பற்றிய அவர்களின் சித்தாந்தங்கள் ஒத்துப் போனதாக தலால் கூறுகிறார். "நாங்கள் அதே போரில் போராடுகிறோம் - தேசியவாதம், பசு பாதுகாப்பு மற்றும் நமது சுதந்திர போராளிகளுக்கு அங்கீகாரம்" என்று 29 வயதான தலால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். "பாஜக மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்களுக்கு விவசாயிகள், தியாகிகள், மாடுகள் அல்லது ஏழைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்.
தலால், சிவசேனா கட்சியின் வேட்பாளர் என்பதை உறுதிசெய்து, சிவசேனாவின் ஹரியானா (தெற்கு) தலைவரான விக்ரம் யாதவ் அறிவித்தார். "அவர் பசு பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். தேச விரோத கோஷங்களை எழுப்புபவர்களுக்கு எதிராக பேசுகிறார். எனவே, நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்கிறார்.
ஆகஸ்ட் 2018 இல், புதுடில்லியில் காலித்தை சுட முயற்சித்ததாக தலால் மற்றும் தர்வேஷ் ஷாப்பூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அச்சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சிக்கிக் கொண்டு ஜாம் ஆனதால், காலித் காயமின்றி தப்பினார். இச்சம்பவத்திற்கு பிறகு தலால் மற்றும் ஷாப்பூர் தப்பித்துவிட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்ட பின்னர், கைது செய்யப்பட்டனர். அந்த வீடியோவில், தாக்குதல் "தேசத்திற்கான சுதந்திர தின பரிசு" என்று அவர்கள் கூறியிருந்தனர்.
#BREAKING: @IPSMadhurVerma has confirmed they have found #CCTV #footage of the man accused of attacking #UmarKhalid outside the #ConstitutionClub.
Image of the #assailant. @IndianExpress pic.twitter.com/c4gPAazF0u
— Mahender Singh (@mahendermanral) August 13, 2018
இந்த வழக்கில் தலால் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார், இந்த விவகாரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தாக்குதல் குறித்து கேட்டதற்கு, இதைப் பற்றி 'இந்த தருணத்தில்' பேச விரும்பவில்லை என்று தலால் கூறினார். "இது உமர் காலித் பற்றி மட்டுமல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றி ஒரு நாள் பேசுவேன்" என்றார்.
யாதவ் தலாலை ஆதரிக்கும் சிவசேனாவின் யாதவ், இது 'தேசபக்தியைக் காண்பிக்கும்' வழி என்று கூறினார். "அவருடன் (காலித்துடன்) தனிப்பட்ட பிரச்சனை இல்லை. இந்திய தலைநகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டு, இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதால் தலால் வருத்தப்பட்டார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வருத்தப்பட்டார். எனவே நவீனின் பார்வையில், இது அவரது தேசபக்தியைக் காட்ட ஒரு வழியாகும்" என்று யாதவ் கூறினார்.
காலித் மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் எஃப்.ஐ.ஆர் உட்பட மூன்று கிரிமினல் வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதாக தலால் தனது தேர்தல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
2014 முதல் பட்டியலிடப்பட்ட மற்ற இரண்டு வழக்குகள்: ஐபிசி 147/149 பிரிவுகளின் கீழ் பகதூர்கரில் ஒரு எஃப்.ஐ.ஆர், மற்றொன்று டெல்லியின் பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. அதில், துண்டிக்கப்பட்ட பசுவின் தலையுடன் பாஜக தலைமை அலுவலகத்திற்குள் அணிவகுத்துச் சென்றதும் அடங்கும்.
தேர்தலுக்காக, தலாலின் பிரச்சார சுவரொட்டிகள் "மாற்றம்" என்று உறுதியளிக்கின்றன மற்றும் அவரது பெயருக்கு முன் "கௌ ரக்ஷக்" என்ற சேர்க்கப்பட்டுள்ளது. மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட கிராமமான மண்டோதி நகரைச் சேர்ந்த தலால், அவரும் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்ற கனவில் வளர்ந்ததாகக் கூறினார்.
"நான் டங்கல்கள் மற்றும் பாய் மல்யுத்தத்தில் பங்கேற்றேன். மேலும் 60 கிலோ எடை வகுப்பில் மாநில அளவில் போட்டியிட்டேன்," என்று அவர் கூறினார். 2010 ஆம் ஆண்டில், காயம் ஏற்பட்டபின் அவரது வாழ்க்கை முன்கூட்டியே முடிந்தது என்று அவர் கூறினார்.
தலாலின் கூற்றுப்படி, அவர் தனது "இரண்டாவது மிகப்பெரிய" ஆவேசத்திற்கு - இராணுவத்திற்கு திரும்பினார். "நான் பல முறை முயற்சித்தேன், புனே மற்றும் அகமதுநகரில் கூட சோதனைகளுக்கு சென்றேன். நான் உடல் சோதனைகளில் தேர்ச்சி பெற்றேன், ஆனால் எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்தேன். ஆனால் இன்னும், நான் நாட்டுக்காக ஏதாவது செய்ய விரும்பினேன். எனவே நான் பசு பாதுகாப்பைத் தொடங்கினேன்" என்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.