நரேந்திர மோடி ஏழை மக்களுக்கு நல்லது செய்வார் என்ற கனவில் இருந்து வெளியில் வாருங்கள் - சிவசேனா

மெட்ரோ, ஹைப்பர் சிட்டி, புல்லட் ரயில்கள் போன்ற மிகப் பெரிய திட்டங்களினால் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்பதை அரசு உணரவேண்டும்.

மும்பை மற்றும் இதர மகாராஷ்ட்ர மாநிலப் பகுதியில் தொடரும் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் தற்கொலைகள் பற்றி கேள்வி எழுப்பியிருக்கும் சிவசேனா.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் அச்சே தின்  வரவே இல்லை என்று தான் தோன்றுகின்றது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவால் ஆளப்படுவதால், மகாராஷ்ட்ரா கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலமாக நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைக் கூட கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆட்சி என்று கூறிக் கொண்டுதான் இருந்தோம். அதை மக்களும் வரவேற்றார்கள். அதே போல் மோடியின் ஆட்சியையும் வரவேற்றார்கள். ஆனால் தினமும் பசியாலும் பட்டினியாலும் மக்கள் தினமும் மடிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. முடிவில் வேறு வழியின்றி குடும்பங்களாக தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.

விதர்பா பகுதியில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலைக்கு எதிராக போராடி வருகின்ற நிலையில், மும்பை மற்றும் இதர மகாராஷ்ட்ரா மாநிலங்களில் வறுமை மற்றும் பசிக் கொடுமையால் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். பந்த்ரா பகுதியில் நான்கு பேர் கொண்ட குடும்பமும், கஃப்பே பரேட் பகுதியில் மூன்று பேரைக் கொண்ட குடும்பமும் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றார்கள் என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

ஆளும் பாஜகவினருக்கு தினமும் பாலிவுட் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும், தொழிலதிபர்களைக் காணவே நேரம் சரியாக இருக்கின்றது. இந்நிலையில் தினமும் ஏழை மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் காண அவர்களுக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கும். மெட்ரோ, ஹைப்பர் சிட்டி, புல்லட் ரயில்கள் போன்ற மிகப் பெரிய திட்டங்களினால் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close