என்.சி.பி தலைவர் பிரஃபுல் படேல் சத்ரபதி சிவாஜி மகராஜின் தலைப்பாகையை (jiretop ) பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (செவ்வாய்கிழமை) அணிவித்தார், இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. சிவாஜியின் மோடிக்கு அணிவித்ததையடுத்து மராட்டிய அமைப்புகளும், மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Jiretop என்பது சத்ரபதி சிவாஜி மகாராஜ் அணிந்திருந்த துர்ஹாவுடன் கூடிய தனித்துவமான கூம்பு வடிவ தலைப்பாகை ஆகும். சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமீப காலங்களில், தலைப்பாகை யாரிடமாவது கொடுக்கப்படும்போது, அதை தலையில் அணிவிக்காமல் கையில் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் தற்போது அதை தலைப்பாகை பிரதமருக்கு வழங்கிய போது கையில் கொடுக்காமல் அதை நேரடியாக தலையில் அணிவித்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இதற்கு பதிலளித்த மராட்டிய அமைப்பான சம்பாஜி படையின் மூத்த உறுப்பினர் சந்தோஷ் ஷிண்டே, “Jiretop அணிந்திருப்பது சத்ரபதி சிவாஜி மகாராஜே தவிர அவரது படையினர் அல்ல. அதேநேரம், ஒருவர் தலைப்பாகை அணிவதற்கு முன் முறையான ஆடை அணிய வேண்டும். அதை மோடி கையில் கொடுப்பதற்குப் பதிலாக அதை அணியச் செய்ததன் மூலம் என்ன செய்தி அனுப்பப்பட்டது? என்றார்.
இந்த செயல் சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதிப்பதாக எதிர்க்கட்சியான என்.சி.பி (எஸ்.பி) சமூக வலைதளமான எக்ஸ்-ல் கண்டனம் தெரிவித்துள்ளது. "ஜிரேடாப் எப்போதும் கைகளில் வழங்கப்படுகிறது மற்றும் யாருடைய தலையிலும் நேரடியாக வைக்கப்படுவதில்லை.
ஆனால் அஜித் பவார் குழுவின் தலைவர் பிரபுல் படேல் அதை நேரடியாக நரேந்திர மோடியின் தலையில் வைத்தது சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதிக்கும் செயலாகும். மகாராஷ்டிராவின் இமேஜை அழிக்கும் அளவுக்கு ஆளும் கூட்டணி (மஹாயுதி) கடமைப்பட்டுவிட்டது. மகாராஷ்டிராவை அவமதித்த பாஜகவுக்கு மகாராஷ்டிராவின் பெருமைக்குரிய மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது மகாராஷ்டிராவின் பெருமைக்கு எதிரான தாக்குதல் என காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் சச்சின் சாவந்த் தெரிவித்துள்ளார். “பிரபுல் படேல் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜிரேடாப் அணிவித்தபோது வெட்கப்படவில்லையா? இது மகாராஷ்டிராவின் பெருமையின் மீதான தாக்குதல்,” என்றார் சாவந்த்.
ஆல்ரவுண்ட் தாக்குதலை எதிர்கொண்டு வரும் நிலையில், மகாராஷ்டிர அமைச்சரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவருமான உதய் சமந்த், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று கூறினார். எதிர்காலத்தில், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“