ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குவதற்கு முன், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைவர் டி.கே.சிவகுமாருக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும் இடையே ஏற்பட்ட உரசல் தீவிரமடைந்தது. இது 2023 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சியை நெருக்கடியில் தள்ளும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ராகுல் காந்தியின் 24 நாட்கள் யாத்திரை மற்றும் பல பேரணிகளுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கிடையேயான ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தை சிவகுமார்- சித்த ராமையாவை ஒற்றுமையாக்கும் பயணம் என்றும் பாஜகவினர் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் ராகுல் காந்தியின் நடைபயணத்தின் போது பெருவாரியான மக்கள் கலந்துகொண்டனர். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இது 2023ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகளாக மாறுமா? என்பதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
அந்த வகையில், ராகுல் காந்தி அணிவகுத்துச் சென்ற பழைய மைசூருவின் ஒக்கலிகா சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸுக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கடலோர கர்நாடகா, மராட்டிய எல்லை பகுதி கர்நாடகா போன்ற பகுதிகளிலும் அதன் தாக்கம் நிச்சயமற்றது என்று சில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெரிய குத்துச்சண்டை போட்டிக்கு எங்கள் வீரர்களை நாங்கள் சூடுபடுத்தியுள்ளோம்,” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) கர்நாடகா பொறுப்பு பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
மாவட்ட அளவில் ஒவ்வொரு மட்டத்திலும் தலைவர்களை உருவாக்குவதில் இந்த நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது, இது கட்சிக்கு மாற்றமாக இருக்கும் என்று சுர்ஜேவாலா கூறினார்.
இந்த நிலையில், யாத்திரையின் மூலம் சட்டமன்றத் தேர்தலில் கட்சி 150 இடங்களை வெல்லும் என்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். மேலும், “யாத்திரை பெற்ற வேகம் அடுத்த ஆண்டு தேர்தல் வரை தொடரும். ஆளும் அரசாங்கத்தை அம்பலப்படுத்த இன்னும் பல திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்” என்றார்.
இருப்பினும், அணிவகுப்பின் தேர்தல் தாக்கம் குறித்து அனைவருக்கும் உறுதியாக தெரியவில்லை. காங்கிரஸின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி, யாத்திரைக்கான ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பதை மதிப்பிடுவது மிக விரைவில் என்று கூறினார்.
தொடர்ந்து, “தேர்தல்கள் நெருங்கும் போது, ஒரு கட்சியின் வாய்ப்புகளை மாற்றும் பல்வேறு பிரச்னைகள் வரும்” என்றும் அவர் கூறினார்.
மேலும், ராகுல் யாத்திரை கடந்து சென்ற தொகுதிகளைப் போலல்லாமல், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நேரடியான தாக்கம் இருக்காது, சிலர் நினைக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.