ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் ஒரு இந்தியர்! பெருமை சேர்க்கும் ஷிவாங்கி

கன்வெர்ஷன் பயிற்சி முடிக்கப்பட்டவுடன், இந்தியாவின் கோல்டன் ஏரோவ்ஸ் ஸ்குவார்டனில் இணைந்து, ரஃபேல் போர் விமானத்தை இயக்க உள்ளார்.

By: September 24, 2020, 2:47:37 PM

Shivangi Singh to be first Rafale woman fighter pilot :  இந்திய விமானப்படையில் பணியாற்றும் லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங், இந்தியா விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும், மேம்படுத்தபட்ட வசதிகளை கொண்ட ரஃபேல் விமானத்தை இயக்கும் முதல் பெண் ஆவார்.

அவருக்கு தரப்பட இருக்கும் கன்வெர்ஷன் பயிற்சி முடிக்கப்பட்டவுடன், இந்தியாவின் கோல்டன் ஏரோவ்ஸ் ஸ்குவார்டனில் இணைந்து, ரஃபேல் போர் விமானத்தை இயக்க உள்ளார். வாரணாசியை பூர்வீகமாக கொண்ட இவர் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் படித்தார். இந்திய விமானப்படையில் தற்போது 10 பெண் போர் விமானிகள் உள்ளனர்.

இதில் ஷிவாங்கி சிங் மிக்21எஸ் விமானத்தை ஓட்டி பயிற்சி பெற்றுவர். உலகிலேயே மிகவும் அதிகமான லேண்டிங் மற்றும் டேக்-ஆஃப் ஸ்பீட் கொண்ட போர்விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.  ஃபிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் கடந்த மாதம் அம்பலா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டது. ரஃபேல் விமானங்கள் இணைப்பு நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Shivangi singh to be first rafale woman fighter pilot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X