/indian-express-tamil/media/media_files/T8quAob0G0NwsVnCMLOP.jpg)
BJP leaders C T Ravi
மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழக்கு தொடர்ந்தது. தற்போது தன் X பக்கத்தில், நடத்தை விதிகளை மீறி வெறுக்கத்தக்க பதிவு செய்ததாக முன்னாள் பாஜக அமைச்சர் சிடி ரவி மீது இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழக்குப் பதிவு செய்துள்ளது.
கர்நாடகாவின் சிக்கமகளூருவில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ரவிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மார்ச் 18 அன்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய வீடியோவை தன் X பக்கத்தில் பதிவிட்ட ரவி, "கடலின் ஆழத்தை அளவிட முடியும், ஆனால் இந்துக்கள் மற்றும் இந்து தர்மத்தின் மீதான ராகுல் காந்தியின் வெறுப்பை ஒருபோதும் கண்டறிய முடியாது" என்று கூறியிருந்தார்.
அந்த வீடியோவில், “இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது, எங்கள் போராட்டம் சக்திக்கு எதிரானது” என்று ராகுல் காந்தி பேசினார்.
"தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நமது தர்மத்தைப் பாதுகாக்க இந்துக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸுக்கு இரக்கமின்றி வாக்களிக்க வேண்டும்" என்று ரவி கூறினார்.
எஃப்.ஐ.ஆரைத் தொடர்ந்து ரவி, “அன்புள்ளஇந்திய தேர்தல் ஆணையம், எனக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் விவரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. ஒரு சனாதனியாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பொறுப்பற்ற மற்றும் உணர்ச்சியற்ற கருத்துகளுக்கு நான் பதிலளித்தேன். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் நான் மிகவும் பாராட்டுகிறேன்”, என்றார்.
பாஜக அமைச்சராக இருந்த ரவி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Read in English: After Karandlaje, Surya and C T Ravi booked for ‘hate’ statements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.