கடைகளுக்கு தீ வைப்பு, கல் வீச்சு, போலீஸுடன் மோதல் – கலவரக் களமான வடகிழக்கு மாநிலங்கள்

Tora Agarwala , Debraj Deb , Jimmy Leivon | Agartala, Guwahati, Imphal | 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 311 […]

Shops set on fire, clashes, stone pelting: North-East simmers over Citizenship Bill – கடைகளுக்கு தீ வைப்பு, கல் வீச்சு, போலீஸுடன் மோதல் – குடியுரிமை மசோதாவால் கலவரக் களமான வடகிழக்கு மாநிலங்கள்

Tora Agarwala , Debraj Deb , Jimmy Leivon | Agartala, Guwahati, Imphal |

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.

சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன. மசோதா மக்காவையில் வெற்றிபெற்றதை அடுத்து நாடு முழுவதும் பல இடங்களில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


மத ரீதியிலான குடியுரிமை வழங்குவது என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சாற்பற்றத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது என்ற முழக்கங்களுடன் போராட்டங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முழு அடைப்பு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹாதியகோன், டிஸ்பூர், கணேஷ்குரி ஆகிய குவஹாத்தி பகுதியில் நடந்த கலவரம் (Express photo)
ஹாதியகோன், டிஸ்பூர், கணேஷ்குரி ஆகிய குவஹாத்தி பகுதியில் நடந்த கலவரம் (Express photo)

நேற்று மசோதா நிறைவேறியதையடுத்து அனைத்து மாணவர்கள் அமைப்புகள் இணைந்த வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னணி (நெசோ) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தம் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

குவாஹாத்தியில் உள்ள ஹடிகான், டிஸ்பூர் மற்றும் கணேஷ்குரி பகுதிகளில் போலீசார் லத்தி சார்ஜ் நடத்தினர். அங்கு எதிர்ப்பாளர்கள் கல் வீசி, டயர்களை எரித்தனர்.

(Express photo)
(Express photo)

பந்த் காரணமாக குவாஹாத்தி பல்கலைக்கழகம் மற்றும் திப்ருகார் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. “ஒரு பெங்காலி என்பதால், நான் CAB க்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் சமூகத்தின் சமூகத் துணிவை உடைக்கும்” என்று திப்ருகார் பல்கலைக்கழக மாணவர் கல்யாண் சென்குப்தா கூறினார்.

சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள திவன்பஜார், வடக்கு திரிபுரா மாவட்டத்தின் காஞ்சன்பூர் மற்றும் தலாய் மாவட்டத்தின் மனு ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் போலீஸாருடன் மோதினர். இது போராட்டத்தால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் லத்தி சார்ஜ் செய்யவும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடவும் நேர்ந்ததாக தலாய் போலீஸ் சூப்பிரண்டு கிஷோர் டெபார்மா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். இருப்பினும், துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று அவர் கூறினார்.

காஞ்சன்பூர் துணைப்பிரிவில் உள்ள ஆனந்தபஜார் கிராமத்தில், எதிர்ப்பாளர்கள் இரண்டு சிறிய வாகனங்களுக்கு தீ வைத்தனர், கிட்டத்தட்ட 25 கடைகளை சேதப்படுத்தினர். திரிபுரா காவல் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 1721 எதிர்ப்பாளர்கள் திரிபுராவின் பல்வேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


எவ்வாறாயினும், குடியுரிமை மசோதாவுக்கு எதிரான வேலைநிறுத்தம் திரிபுராவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று முதல்வர் பிப்லாப் குமார் தேப் கூறினார்.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் காரணமாக திரிபுரா பாதிக்கப்படவில்லை. அரசு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. வடகிழக்கில் மசோதா தொடர்பாக ஒரு தவறான கருத்து பரவி வருகிறது. இந்த மசோதாவால் வடகிழக்கின் எந்த பகுதியும் பாதிக்கப்படாது” என்றார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shops set on fire clashes stone pelting north east simmers over citizenship bill

Next Story
1949 மதரீதியான பிரிவினையின் கட்டாயம் தான் இந்த மசோதா: அமித் ஷாcitizenship amendment bill,cab,what is citizenship amendment bill,cab bill, nrc,amit shah
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express