arvind-kejriwal | delhi | டெல்லி மதுபான மோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் கைது செய்தால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது குறித்த மக்களின் கருத்துகளைப் பெற அக்கட்சி விரும்புகிறது.
அதற்காக, வெள்ளிக்கிழமை (டிச.1) கையொப்ப பிரச்சாரத்தை ஆம் ஆத்மி தொடங்குகிறது. மேலும், இந்த வழக்கில் கெஜ்ரிவால்-ஐ கைது செய்யப்படுவதற்கான சதித்திட்டத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
“மாய் பி கெஜ்ரிவால்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஆம் ஆத்மி தன்னார்வலர்கள் டெல்லியில் உள்ள 2,600 வாக்குச் சாவடிகளிலும் மக்களின் கருத்துக்களை கேட்பார்கள்.
“கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டுமா அல்லது சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த வேண்டுமா?” என கையெப்பங்கள் சேகரிக்கப்படும்.
மேலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்தப் பரப்புரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, டிச.21-24ஆம் தேதிவரை கெஜ்ரிவாலை கைது செய்ய பாஜக சதி குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஏன் அரசியல் ரீதியாக முக்கியமானது: தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது.
மேலும், இது ஒரு முக்கிய அங்கமாக பாஜக கட்சியை குறிவைப்பதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. முன்னதாக நவ.26 கட்சியின்நிறுவனத் தினத்தில், “இந்தியாவின் வரலாற்றில் வேறு எந்த அரசியல் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியைப் போலவே குறிவைக்கப்படவில்லை” என்றார்.
இதற்கிடையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் நாடகம் நடத்துகிறார். அவர் கைது செய்யப்பட்டால் அது அரசியல் ரீதியாக பாஜகவுக்கு வாய்ப்பாக கூட அமையும் என்ற கருத்தும் எழுந்துளளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Today in Politics: ‘Should Kejriwal resign?’ — why AAP is holding a referendum on this question
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“