Shri Ramayana Express : நவம்பர் ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸை,ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலால் நவம்பர் மாதம் துவங்கி வைக்கிறார். டெல்லியில் நமவ்பர் 3ம் தேதி தொடரும் இந்த ரயில் சேவை, ராமருடன் தொடர்பு கொண்ட பல்வேறு புனித தளங்களை தொட்டு பயணிக்கிறது பின்பு அது மீண்டும் டெல்லியை நோக்கி பயணிக்கிறது. இது மட்டும் அல்லாமல் இலங்கைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு விமான சேவைகளும் இந்த பேக்கேஜில் தனியாக தரப்பட்டுள்ளது. 40 பேர் இதில் பயணிக்கலாம்.
Shri Ramayana Express : வழித்தடம்
டெல்லியில் இருந்து கிளம்பும் இந்த ரயில் நேரடியாக அயோத்தியாவிற்கு செல்கிறது. பின்பு அங்கிருந்து ஹனுமன் கர்ஹி, ராம்கோட், கனக் பவான் கோவில்களையும் அடைகிறது. ராமாயண புராணத்தில் வரும் இடங்களான நந்திகிராம், சீதாமர்ஹி, ஜானக்பூர், வாரணாசி, ப்ரயாக், ஸ்ரீங்பூர், சித்ராகூட், நாஷிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் என்று நீளுகிறது இந்த பயணம். மொத்தம் 16 நாட்கள் இந்த பயணம்.
மேலும் படிக்க : IRCTC Premium Tatkal Tickets: ஐ.ஆர்.சி.டி.சி பிரீமியம் தட்கல் – அறிய வேண்டிய 5 விஷயங்கள்!
இந்த பயணத்திற்கான கட்டணம்
மூன்று நேர உணவுகள் இந்த பேக்கேஜில் இலவசமாக வழங்கப்படுகிறது. தர்மசாலாவில் தங்க வைக்கப்படுவார்கள், சர்வீஸ், செக்யூரிட்டி, ட்ராவல் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ. 16,065 நிர்ணயக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பயணத்திற்கான கட்டணம் ரூ.36,950 ஆகும். சென்னையில் இருந்து கொழும்புவிற்கு சென்று அங்கு 5 நாட்கள் சுற்றிப்பார்க்க தனியாக ரூ.55 ஆயிரம் ரூபாய் கட்டணம். இலங்கை பயணத்தில் கண்டி, நூவரேலியா, கொழும்பு, நேகொம்பூ ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்க இயலும்.