Advertisment

காங்கிரஸின் வெற்றி மேகதாது அணை கட்ட உதவும்; சித்த ராமையா வீதிவீதியாக பரப்புரை

பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதியில் காங்கிரஸின் வெற்றி மேகேதாது அணை கட்ட உதவும் என கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார். மேகேதாது அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
siddharamaiya karnataka

காங்கிரஸின் வெற்றி மேகதாது அணை கட்ட உதவும் என கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா வீதிவீதியாக பரப்புரை நடத்தினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

siddharamaiah | Lok Sabha Election | Mekedatu | Congress | பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க மேகதாது திட்டம் அவசியம் என்றும், மேகதாதுவுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டுமானால் சௌமியா ரெட்டி வெற்றி பெற வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு தெற்குத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக சித்த ராமையா வாகனப் பேரணி நடத்தினார்.

Advertisment

காங்கிரஸின் வெற்றி அணை கட்ட..

அப்போது, பாஜக எம்பி தேஜாவி சூர்யாவின் “தொடர் தோல்விகளை” சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசிய சித்த ராமையா, “பெங்களூரு தெற்கு பகுதியில் காவிரி குடிநீருக்கான இணைப்பை அதிகரிக்க வேண்டும்.

இப்போது அது 60 சதவீதம் மட்டுமே. மேகதாது திட்டம் நிறைவேற வேண்டுமானால் சௌமியா ரெட்டியின் வெற்றி அவசியம்” என்றார்.
மேலும், “சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சௌமியா ரெட்டிக்கு அநீதி இழைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நீதி பெறுவோம்” என்றார்.

மேகேதாது திட்டம்

மேகேதாடு திட்டம் என்பது ராமநகர மாவட்டத்தில் கனகபுரா அருகே சமநிலை நீர்த்தேக்கத்தை கட்டும் ஒரு பல்நோக்கு (குடிநீர் மற்றும் மின்சாரம்) திட்டமாகும். இது முடிந்ததும், பெங்களூரு நகருக்கு குடிநீர் தேவைக்காக 4 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
இதில் பட்டியலின தனித் தொகுதிகளாக 5ம், பழங்குடி இன தொகுதிகளாக 2ம் உள்ளன.

2019 தேர்தல் நிலவரம்

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 51.7 சதவீத வாக்குகளைப் பெற்று 25 இடங்களிலும், காங்கிரஸ் 32.1 சதவீத வாக்குகளைப் பெற்று 1 இடத்திலும், கர்நாடகாவில் ஜேடி(எஸ்) மற்றும் சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mekedatu siddharamaiah Congress Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment