அயோத்தியில் திங்கள்கிழமை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்காததற்காக பா.ஜ.க-வின் கடும் கண்டனத்திற்கு உள்ளான, கர்நாடகா முதல்வர் சித்தராமையா பெங்களூரு மகாதேவபுராவில் ராமர் சீதா லட்சுமணன் கோவிலையும், 33 அடி உயர ஹனுமான் சிலையையும் திறந்து வைத்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Siddaramaiah inaugurates Ram Sita Lakshman temple, says Congress worships Gandhi’s Ram, not BJP’s
காங்கிரஸ் தலைவர்கள் மகாத்மா காந்தியின் ராமரை வழிபடுவதாகவும், பா.ஜ.க-வின் புராண உருவத்தின் வடிவத்தை அல்ல என்றும் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், அவர்களுக்கு எதிரான தவறான பிரச்சாரங்களை கண்டித்தார்.
அவர் திறந்து வைத்த ராமர், சீதா, லட்சுமணன் கோவிலைப் போல இல்லாமல், அயோத்தி கோயில் ராமருக்காக மட்டுமே கட்டப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். “ஸ்ரீராமன் தனியாக இருக்க முடியாது. அவர் முழுமையடைய சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர் இருக்க வேண்டும். ஸ்ரீராமனையே பிரிக்கிறார்கள். இது சரியல்ல” என்று சித்தராமையா கூறினார்.
அயோத்திக்கு செல்வாரா என்பது குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்ததைக் குறிப்பிட்ட சித்தராமையா, கோயிலுக்குச் செல்வதாகக் கூறினார். “அனைத்து கோயில்களிலும் ராமர் சிலை ஒரே மாதிரி இல்லையா? மற்ற ராமர் கோயில்களில் உள்ள சிலைகளிலிருந்து ஸ்ரீராமச்சந்திரர் வேறுபட்டவரா?” என்று கேட்ட சித்தராமையா, “மாநிலம் முழுவதும் பல ராமர் கோவில்கள் உள்ளன, எனது கிராமத்திலும் ஒன்றைக் கட்டியுள்ளேன்” என்று கூறினார்.
கோவில் திறப்பு விழாவில் பேசிய சித்தராமையா ஜெய் ஸ்ரீராம் கோஷம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. “அது ஒவ்வொரு பக்தனின் சொத்து” என்று கோஷம் எழுப்பி, கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.
மகாத்மா காந்தி, ராமரின் சிறந்த பக்தர் என்றும், அவரது உதடுகளில் ராமரின் பெயரை உச்சரித்து மரணமடைந்தார் என்றும் அவர் கூறினார். “காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் ராமரை வணங்குகிறது, பா.ஜ.கப்வின் ராமரை அல்ல,” என்று சித்தராமையா கூறினார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு விடுமுறை அறிவிக்காததற்காக பா.ஜ.க தன்னை ‘இந்து விரோதி’ என்று முத்திரை குத்தியது குறித்து, பேசிய அவர் மத்திய அரசும் அரை நாள் விடுமுறை மட்டுமே அறிவித்துள்ளது என்றார். “இந்த நிகழ்வு உத்தரபிரதேசத்தில் நடைபெறுகிறது. பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ளனவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“