/indian-express-tamil/media/media_files/c1vXySt2kRdhxD3jzDid.jpg)
வயநாட்டுக்கு கர்நாடகா 100 வீடுகள் கட்டித் தர உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்
வயநாடு மாவட்டம் முண்டக்காய் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவால் இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பாதுகாப்பான பகுதியில் டவுன்ஷிப் அமைக்கப்படும் என்று கேரள அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.
கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் செய்தியாளர் சந்திப்பின் போது, ​​“ஒரு விரிவான மறுவாழ்வு செயல்முறை திட்டமிடப்பட்டுள்ளது; இது, விரைவாக செயல்படுத்தப்படும்” என்றார்.
மேலும், “நிலம் வழங்குவதற்கும் வீடுகள் கட்டுவதற்கும் உலகளாவிய சமூகத்திலிருந்து பல்வேறு சலுகைகள் வந்துள்ளது” என விஜயன் கூறினார்.
இந்தச் சலுகைகளை ஒருங்கிணைக்க, கூட்டு நில வருவாய் ஆணையர் கீதா ஐஏஎஸ் தலைமையில் ‘வயநாடுக்கான உதவி’ பிரிவு உருவாக்கப்பட்டது.
"எஞ்சியிருப்பவர்களுக்கு ஒரு விரிவான மறுவாழ்வு செயல்முறையை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இது விரைவாக முடிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Daring rescue of stranded tribal kids by Kerala foresters in the aftermath of Wayanad landslides risking their lives. Salute to all unsung heroes 🫡 #WayanadLandslide video credits Kerala Forest Dept pic.twitter.com/YHF2Balbyc
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 3, 2024
நகர்மன்றம் கட்டுவதற்கு புதிய, பாதுகாப்பான பகுதி கண்டறியப்படும்” என்றார். முன்னதாக, முன்னாள் வயநாடு எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “வயநாடு மக்கள் மறுவாழ்வுக்காக 100 வீடுகளை கட்டி தருவோம்” என்றார்.
I am deeply grateful to the people and the government of Karnataka for their generous support during these difficult times in Wayanad.
— Rahul Gandhi (@RahulGandhi) August 3, 2024
Your commitment to building 100 houses for the victims of the tragic landslide is a significant step towards rehabilitation efforts.
The… https://t.co/2P3qZOleyY
இந்நிலையில், கர்நாடக அரசு 100 வீடுகளை கட்டி தர உள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.