Advertisment

நரேந்திர மோடியை, “நீச்” என விமர்சித்த சித்த ராமையா: “அறிவுசார் திவால்நிலை” என பாஜக பதில்

2017ல் குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை நீச் ஆத்மி என்று காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
Sep 08, 2023 01:41 IST
 Karnataka Chief Minister Siddaramaiah

கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா

உணவு தானியங்களை வெளிப்படையாக விற்பனை செய்வதை நிறுத்தும் இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) முடிவு குறித்து மத்திய அரசை திட்டியதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக பதிலடி கொடுத்தது.

Advertisment

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அன்ன பாக்யா திட்டத்திற்காக கர்நாடகாவுக்கு மலிவான அரிசி கிடைப்பதை மறுப்பதற்காக நரேந்திர மோடி அரசாங்கம் அவ்வாறு செய்தது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இது குறித்து சித்தராமையா, “அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை.

நாங்கள் 36 ரூபாய் (ஒரு கிலோ) தருவதாக ஒப்புக்கொண்டோம். அவர்கள் அதை வழங்க ஒப்புக்கொண்டனர்.

பின்னர், மறுத்தனர். அவர்கள் எப்படி நீசனாக இருக்க முடியும்? அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள். அவர்களிடம் மனிதாபிமானம் இல்லை” என்றார்.

சித்தராமையாவும் காங்கிரஸும் பிரதமர் மோடியை ‘நீச்’ என்று அழைக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ.யிடம் பிரதமர் மோடி ஏழை பின்னணியில் இருந்து வந்ததால், “பிரதமர் மோடி நாற்காலி மீது காங்கிரஸ் கட்சி பொறாமை கொண்டுள்ளது. இது காந்தி குடும்பத்திற்கு சொந்தமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, சித்தராமையாவின் கருத்துகள் அவரது அறிவுசார் திவால்நிலையை காட்டுவதாக சமூக ஊடகங்களில் பாஜக பதிவிட்டுள்ளது.

அதில், “"பிரதமர் ஸ்ரீ @நரேந்திரமோடியைத் தாக்குவதற்காக அவர் தேர்ந்தெடுத்த 'நீச்' மற்றும் 'மனிதாபிமானமற்ற' வார்த்தைகள், உண்மையில் சித்தராமையாஜியின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சனாதன தர்மம் குறித்த திமுக தலைவரும், காங்கிரஸ் கூட்டணி கட்சியுமான உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால், சித்தராமையாவின் வார்த்தைகளைகளும் சர்ச்சையாகி உள்ளன.

இந்த நிலையில், எதிர்கட்சியான இந்திய கூட்டணியை "இந்து விரோதி" என்று காட்டுவதாக பாஜக குற்றம் சாட்டினாலும், மதத்திற்குள் இருக்கும் சாதிவெறியை மட்டுமே தாக்குவதாக திமுக கூறியுள்ளது.

Siddaramaiah sparks off ‘neech’ row: BJP questions CM jab at Centre over FCI move halting rice sales

டெல்லியில் நடைபெற்ற ஏஐசிசி செய்தியாளர் கூட்டத்தில் சித்தராமையாவின் கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா, “நமது பிரதமர் ஏன் இவ்வளவு வலிமை இழந்தவராக உள்ளார்? என்ன நடந்தது? அவர் ஏன் தொந்தரவு செய்கிறார்?... பிரதமரை வலுவாக இருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இதற்கிடையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் ‘க்ஷீர பாக்யா’ திட்டத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு தும்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்தராமையா, “கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற உடனேயே ஜூன் மாதம் வரும் எஃப்சிஐ நடவடிக்கை அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்குப் பணத்தைக் கொடுக்கும்படி வற்புறுத்தியது.

எனினும், அரசாங்கம் இப்போது தேவையான அரிசியை வாங்கும் நிலையில் உள்ளது” என்றார்.

அப்போது, தங்களுக்கு அரிசி வேண்டும் என்று மக்கள் கூச்சலிட்டனர். இதற்கு, ““மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு நாங்கள் 10 கிலோ அரிசி தருகிறோம். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது” என சித்த ராமையா பதிலளித்தார்.

தொடர்ந்து, எஃப்சிஐயை ஒரு அரசியல் கருவியாக மோடி அரசு பயன்படுத்துகிறது. அரிசி கையிருப்பு இருப்பதாகவும், அதை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்திய உணவுக் கழகம் எங்களுக்கு பதிலளித்தது. நாங்கள் அதை நம்பினோம்.

இருப்பினும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வைத்தனர். பாஜக ஏழைகளுக்கு ஆதரவா? எனக் கேள்வியெழுப்பினார். இதையடுத்து நீச் என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார்.

கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், கர்நாடக முதல்வர் சித்த ராமையா, மத்திய அரசு அதன் விற்பனையை நிறுத்தியபோதும், FCI யில் கையிருப்பில் உள்ள அரிசி “புழுக்களால் அழுகியதாக” மாறிவிட்டது என்றார்.

அப்போது, "அவர்கள் அரிசியை பகிரங்கமாக ஏலம் விட சென்றனர், ஆனால் யாரும் அதை வாங்க முன்வரவில்லை" என்று சித்தராமையா கூறினார்.

காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், எஃப்சிஐ நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார், கார்ப்பரேஷனிடம் கர்நாடகா மற்றும் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்புக்கள் இருந்தாலும், “கர்நாடக அரசாங்கத்தின் ஒவ்வொரு வழியையும் மூடுவதற்கு மோடி அரசாங்கம் மிகவும் முயன்று வருகிறது” என்றார்.

இதற்கிடையில், உணவு அமைச்சகம் FCI பங்குகளில் இருந்து அரிசி விற்பனையை நிறுத்த பணவீக்க போக்குகளை மேற்கோள் காட்டியுள்ளது.

மத்திய அமைச்சர் ஜோஷி, எங்களிடம் அரிசி இருப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதித்தோம். அரிசியின் விலை அதிகரித்து வருகிறது... பல பாஜக ஆளும் மாநிலங்களும் அரிசியைக் கோருகின்றன, ஆனால் தற்போது அது நம்மிடம் இல்லை... காங்கிரஸால் பயன்படுத்தப்படும் ‘நீச்’ வார்த்தை அவர்களின் ‘கமன்ட் (திமிர்)’க்கு உதாரணம்“ என்றார்.

தொடர்ந்து, "சரியான திட்டமிடல் இல்லாமல், எளிதாக விளம்பரம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வியை மறைக்க காங்கிரஸ் அரசு தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறது" என்று பாஜக கூறியது.

2017ல் குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை நீச் ஆத்மி என்று காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி அய்யரிடம் கேட்டுக்கொண்டார், பின்னர் தலைவர் முதன்மை தலைமையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment