கர்நாடக மாநில பட்ஜெட் உரையின் போது அம்மாநில முதல்வர் சித்தராமையா, சர்ச்சைக்குரிய மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தற்போதைய அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை விதான சவுதாவில் இருந்து தாக்கல் செய்தார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உத்தரவாத திட்டங்கள் மூலம் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார். எங்களுடைய ஐந்து உத்தரவாதங்கள் ரூ. 52,000 கோடியை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நேரடியாக செலுத்தப்படும் என்று கூறினார். இது உலகளாவிய அடிப்படை வருமானத்தின் கருத்தின்படி, இது நாட்டிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
கர்நாடகாவில் தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) பதிலாக மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மறைந்த நடிகர் டாக்டர் புனித் ராஜ்குமாரின் நினைவாக அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளிலும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் (AED) நிறுவப்படும் என்றார். மேலும், பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.70,427 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
சர்ச்சைக்குரிய மேகதாது திட்டம் குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, அதற்கான அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காடு வளர்ப்பிற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு நிலம் கையகப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"